ஊழல் செய்த முன்னாள் அதிமுக அமைச்சருக்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் சிறை தண்டனை-நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

1992ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. இவர் 1992-1996 கால கட்டத்தில் அமைச்சராக செயல்பட்டார். அந்த சமயத்தில் இவர் மதர் இந்தியா என்ற அறக்கட்டளையையும், பரணி ஸ்வேதா என்ற அறக்கட்டளையையும் தொடங்கி நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையின் அறங்காவலராக தனது கணவர் பாபுவை நியமித்தார்.

அப்போது காது கேளாதோர், ஊனமுற்ற மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியை தொடங்குவதாக கோரி அரசிடம் இருந்து 15.45 லட்சம் நிதியை பெற்றார். ஆனால் அந்தப் பள்ளி தொடங்கவே இல்லை என்று கூறப்பட்டது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

இது தொடர்பாக ஆரம்ப காலத்தில் குற்றச்சாட்டு எழுந்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாறியது, மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை துரிதமாக விசாரிக்க முடிவு செய்தது.
அந்த சமயத்தில் எம்எல்ஏ, எம்பிக்களின் மீதான விசாரணையை நடத்தக் கூடிய சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்த வழக்கை விசாரித்த சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமாரி, ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐஏஎஸ், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், அமைச்சர் இந்திரா குமாரின் கணவருமான பாபு ஆகிய 3 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது, இதையடுத்து இன்று 29.09.21 இந்திரகுமாரி, பாபு ஆகிய இருவருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனையும் இதற்கு உடந்தையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே நெஞ்சை பிடித்தபடி கீழே விழுந்தார் இந்திரகுமாரி, இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருப்பதாகவும், அதிர்ச்சியான தகவலை கேட்டதால் சுவாசக் கோளாறு காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கலாம் என்றும் இந்திரகுமாரி தரப்பினர் கூறுகின்றனர்.

இப்படி அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன், செல்வகணபதி, கண்ணப்பன் இவர்களைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரியும் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கட்சி மாறினாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்பதையும் இந்திரகுமாரி தற்போது உறுதி செய்துள்ளார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.