தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு. க அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர் !
2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மதுரைமாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்
கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டனதேர்தலில் ஓட்டு வாங்க அழகிரி பணம் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள் வீடியோ மற்றும் புகைப்படக்கலைஞர் அங்கு நேரில்சென்று வீடியோ எடுத்தனர்இதற்கு அழகிரி கடும் எதிர்ப்புத் தெரிவித்து அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து முக. அழகிரிமற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுஇது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி லீலாபானு முன்பாக விசாரணைக்கு வந்தபோது முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரிமற்றும் திமுக. நிர்வாகிகளான 20 பேர் நேரில் ஆஜராகினர் இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் மார்ச் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள்.
– ஷாகுல்
படங்கள் – ஆனந்த்