மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் நினைவு மாநில அளவிலான ஹாக்கி போட்டி !
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் நினைவு” ஒன்பதாவது மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நடைபெற்றது, மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் பதிமூன்றாவது இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி போட்டி அமெரிக்கன் கல்லூரியில் அமைந்துள்ள ஹாக்கி மைதானத்தில் பிப்ரவரி 19 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில்சென்னை. கோவில்பட்டி, ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், திண்டுக்கல், விருதுநகர், மற்றும் மதுரையில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டனஇறுதிப்போட்டியில் எஸ்எஸ்துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி, கோவில்பட்டி 6 5 என்ற கோல் கணக்கில் அமெரிக்கன் கல்லூரி அணியினை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர்தவமணி கிறிஸ்டோபர் வரவேற்புரை வழங்கினார். சிவபாலன், காவல் ஆய்வாளர், தலைமை வகித்து, சிறப்புரை வழங்கினார்.
வெற்றி பெற்ற கோவில்பட்டி துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அணிக்கு பரிசுத் தொகை ரூ.25000 உடன் பிஷப் டாக்டர். கிறிஸ்டோபர் ஆசீர் நினைவு சுழற் கோப்பையும், இரண்டாவது இடம் பெற்ற அமெரிக்கன் கல்லூரி அணிக்கு பரிசுத் தொகை ரூ.15000 உடன் ராஜ மன்னார் நினைவு சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது.
மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தினை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகமும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோவில்பட்டி பெற்றன. உடற்கல்வி இயக்குநர் பாலகிருஷ்ணன் அவர்கள் நன்றியினை கூறினார். ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள், மதுரையில் உள்ள விளையாட்டுத் துறை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
-ஷாகுல்
படங்கள் – ஆனந்த்