அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி நான்கு மாணவர்கள் உயிரிழப்பு…

0

திருச்சியில் அடகு நகையை விற்க

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக , எடப்பாடி அரசு மற்றும் கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றுள்ளனர்.

ஆற்றின் உள்ளே சென்று தண்ணீரில் நீந்தி விளையாடி உள்ளனர். அப்போது திடீரென நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்‌. அவர்களைக் காப்பாற்ற மாணவர்கள் முயன்று உள்ளனர். ஆனால் முடியாது போகவே, மற்ற மாணவர்கள் பதறி அடித்துச் சென்று வெளியில் சென்று அக்கம் பக்கத்தினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த எடப்பாடி தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி மாயமான கல்லூரி மாணவர்களை ஆற்றில் தேடினர்.

காவிரி ஆற்றில் மூழ்கிய எடப்பாடி அரசு கலை கல்லூரி மாணவர்கள் , இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் , கன்னந்தேரி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் எட்டிகுட்டை மேடு பகுதியை சேர்ந்த முத்துசாமி எருமைப்பட்டி பகுதியை சேர்ந்த சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் இறுதியில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

முதல்வர் பிறந்தநாள்

இது தொடர்பாக, தேவூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் மீட்கப்பட்ட மாணவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது .

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அந்த பகுதியில் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கல்லூரியில் ஒரே வகுப்பை சேர்ந்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, கல்வடங்கம் கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் திரு.மணிகண்டன், த/பெ.மணி (வயது 20), முத்துசாமி, த/பெ.செல்வம் (வயது 20), திரு. மணிகண்டன் (வயது 20) மற்றும் திரு.பாண்டியராஜன் (வயது 20) ஆகியோர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

-சோழன்தேவ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.