ஸ்விகி மூலமாக ஆர்டர் செய்து ஏமாந்த சம்பவம்- Beware!! ஜாக்கிரதை நண்பர்களே
Partners in Fraud Daalchini Restaurant & Swiggy இரண்டாவது முறையாக ஈகாட்டுத்தாங்கலில் உள்ள டாலிசினி உணவகத்தில் ஸ்விகி மூலமாக ஆர்டர் செய்து ஏமாந்த சம்பவம். முதல் முறை, 2 மாதங்களுக்கு முன், வீட்டில் விருந்தினர்கள் வந்த போது, உணவு ஆர்டர் செய்த போது, தந்தூரி சிக்கன் full மட்டும் மிஸ்ஸிங். புகார் அளித்த போது, தவறு நேர்ந்து விட்டது, மீண்டும் ஒரு 20 நிமிடத்தில் டெலிவரி அனுப்புகிறோம் என டாலிசினி ஹோட்டலில் இருந்து போனில் உறுதி சொன்னார்கள்.
காத்திருக்கிறோம், காத்திருக்கிறோம்… 1 1/2 மணி நேரமாக பசியோடு. தந்தூரி சிக்கன் வரவே இல்லை. அதில் வேடிக்கை என்னவென்றால் அப்பார்ட்மெண்ட் கீழே வந்துவிட்டதாக கூறிவிட்டு, ஒரு மணி நேரமாகியும் வராமல் ஏமாற்றிய எத்தன்கள்.
இன்று பரோட்டா + சிக்கன் காம்போ இரண்டு செட் ஆர்டர் மற்றும் இட்லி 3 செட் ஆர்டர் செய்தால், இட்லி, சாம்பார், சட்னி உடன் பரோட்டா மட்டும் அனுப்பிவிட்டு சிக்கன் கறி வரவில்லை. அதே ஸ்விக்கி, அதே டாலிசினி… இரவு 9.30- 10.39 வரை ஒரு மணி நேரமாக டாலிசினி, ஸ்விக்கி இருவரிடமும் மல்லுக்கட்டி கடைசிவரை சிக்கன் கறி சைட் டிஷ் அனுப்பவில்லை. 300 ரூபாய் ரிபண்ட் தருவதாக பேசினார்கள்.
வெறும் பரோட்டாவை எப்படி சாப்பிட என்று கேட்டால் , திரும்பவும் அதே கதை… போங்கடா என நுகர்வோர் நீதிமன்றத்திற்கு போவோம் என மிரட்டிவிட்டு முடித்துவிட்டேன்.
நூதனமாக ஏமாற்றும் இந்த பிராடுத்தனத்தை இன்னும் எத்தனை ஹோட்டல்களில் செய்கிறார்களோ ? இதற்கு முன்பும் ஏதேனும் சில முறை சில ஐட்டம் மிஸ் ஆகும், ரிபண்ட் செய்வார்கள். ஆனால் ஒரே ரெஸ்டாரண்ட்டில் தொடர்ந்து இப்படி நடப்பது எதேச்சையாக நடப்பதாக தெரியவில்லை. திட்டமிட்டே ஏமாற்றுகிறார்கள்.
அலுவலகத்திலிருந்து இரவு நேரம் கடந்து வந்து சமைக்க நேரமில்லாமல், பசிக்கு ஆர்டர் செய்தால்… இந்த உணவு வியாபாரிகள்… திருட்டுத்தனத்தை பிழைப்பாக வைத்திருக்கிறார்கள்.