டிஸ்னி ஹாட் ஸ்டாரின் ‘சட்னி சாம்பார்

0

டிஸ்னி ஹாட் ஸ்டாரின் ‘சட்னி சாம்பார் ‘ இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் ‘சட்னி-சாம்பார்’ சீரிஸ் உருவாகியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த சீரிஸ் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

https://businesstrichy.com/the-royal-mahal/

நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார். ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த வெப் சீரிஸில் யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல்
நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். இயக்குனர் R .சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

‘சட்னி-சாம்பார்’ சீரிஸிற்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றி புகழ் பெற்ற அஜேஷ் அசோக் இசையமைத்துள்ளார்.

‘சட்னி-சாம்பார்’ சீரிஸை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன். பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர், எடிட்டிங் ஜிஜேந்திரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.