இலவச மின்சாரம் வழங்க லஞ்சம் ! இளமின் பொறியாளர் (JE) கைது !
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, செங்காட்டுப்பட்டி இளமின் பொறியாளர் விவசாய நிலத்திற்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.3000/-லஞ்சமாக கேட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது.
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கோம்பையை சேர்ந்த முத்து என்பவர் அவருடைய விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வேண்டி தாட்கோ மூலம் விண்ணப்பித்திருந்தார். அதற்கான நிதி தாட்கோ மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மின் இணைப்பு வழங்க காலதாமதம் ஆனதால், இது தொடர்பாக கடந்த 27.02.2026 அன்று புகார்தாரர் முத்து என்பவர் செங்காட்டுபட்டி மின்வாரிய இளமின் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து இளமின் பொறியாளர் ராஜு என்பவரை சந்தித்த போது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3000/- த்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத புகார்தாரர் முத்து, நேற்று (27.02.2026) திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று (28.02.2026) திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் அவர்கள் தலைமையில் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் குழுவினர்களுடன் இரசாயனம் தடவப்பட்ட லஞ்சப்பணம் ரூ.3000/-த்தை புகார்தாரரிடம் கொடுத்தனுப்பி, மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின்போது திருச்சி மாவட்டம், துறையூர் 110 கி.வோ துணை மின் நிலைய அலுவலகத்தில் வைத்து, செங்காட்டுப்பட்டி இளமின் பொறியாளர் ராஜு இரசாயனம் தடவப்பட்ட லஞ்சப்பணம் ரூ.3,000/-ஐ முத்து என்பவரிடமிருந்து கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.