இலவச மருத்துவ முகாம் – பொது அறிவிப்பு!
பொதுமக்கள் அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு!
Omega Centre of Hope இலவச வேலைவாய்ப்பு & இலவச திறன் பயிற்சி மையம் மற்றும் Dr. Agarwal’s Eye Hospital, Gitanjali Medical Center, HearZap, Thillai Dental Care, Steffy’s Note (Lactation & Childbirth) இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
இந்த மருத்துவ முகாமில்,
- கண் பரிசோதனை
- காது பரிசோதனை
- பல் பரிசோதனை
- கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஆலோசனை
- பொது மருத்துவப் பரிசோதனை
- ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரைப் பரிசோதனை ஆகிய மருத்துவச் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன!
நாள்: 31.10.2026, சனிக்கிழமை
நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை!
இடம்: நாச்சிக்குறிச்சி சமுதாயக் கூடம்!
பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது உடல்நலத்தைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இந்தத் தகவலைத் தெரிவித்து, அனைவரும் பயன்பெற உதவுங்கள்!
இலவச மருத்துவ முகாம்! அனைவரும் வருக! நலமுடன் வாழ்க! நன்றி!






Comments are closed, but trackbacks and pingbacks are open.