போர்ஜரி கையெழுத்து … மோசடி ஆவணங்கள் … அடாவடி … பக்கா சீட்டிங் வங்கிகள் ! வீடியோ பதிவுகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வங்கிகள் சேவைத்துறை என்ற வகைப்பாட்டில்தான் இன்று வரையில் இருந்து வருகிறது. வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப கடனுதவி செய்து, வாடிக்கையாளரின் வளர்ச்சியினூடாக வங்கியும் வளர்ச்சி பெறும் என்பதெல்லாம் அந்தக் காலம். கந்துவட்டிக் காரனை விடவும் மிக மோசமாகவும், இரக்கமற்ற முறையிலும் நடத்துவதுதான் இப்போதைய பொதுப் போக்காகவே மாறியிருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது, அடுத்தடுத்து அம்பலமான வங்கி மோசடி விவகாரங்கள்.

பண பலமும் ஆள் பலமும் வங்கி என்ற செல்வாக்கும் இருப்பதால், சாமானிய வாடிக்கையாளர்களால் எதுவும் செய்துவிட முடியாது என்ற துணிச்சலே, இதுபோன்ற அடாவடிகளுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன. தனியார் வங்கிதான் என்றில்லை, அரசுத்துறை வங்கிகளும் இதில் விதி விலக்கில்லை.

Sri Kumaran Mini HAll Trichy

குறிப்பாக,

பக்கா சீட்டிங் வங்கிகள் !
பக்கா சீட்டிங் வங்கிகள் !

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

* வாராக்கடனாக கணக்கு மாறிவிடக்கூடாது என்பதற்காக, வாடிக்கையாளரின் முன் அனுமதியைப் பெறாமலேயே, அவர் கோராமலேயே வங்கியாகவே தன் விருப்பத்திற்கு அவர் கணக்கில் கடன்களை வழங்குவதில் செய்யும் தில்லுமுல்லுகள்.

* அடமானமாக வைத்த சொத்துக்களின் சந்தை மதிப்பைக் காட்டிலும், அடிமாட்டு விலைக்கு சொத்துக்களை விற்று வாடிக்கையாளர்களை போண்டியாக்குவது.

* இதுபோன்று வங்கிகள் ஏலம் விட்ட சொத்துக்களை வாங்கியவர்களின் பட்டியலை ஆராய்ந்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் வாய்ப்புகள் இருக்கிறது. வங்கிக்கு கட்டிடத்தை வாடகைக்கு கொடுத்தவர்; வங்கியின் நட்சத்திர வாடிக்கையாளர்; வங்கி அதிகாரிகளின் பினாமிகள் தான் பெரும்பாலான சொத்துக்களை வாங்கியிருக்கிறார்கள்.  அவ்வாறு, வாங்கிய மூன்றே மாதத்தில், வாங்கிய மதிப்பைவிட பத்து மடங்கு விலை வைத்து மற்ற நபர்களுக்கு கைமாற்றி விட்டிருக்கிறார்கள். அல்லது, வேறொரு வங்கியில் அதே சொத்தை அதனைவிட பலமடங்கு கடனாக பெற்றிருக்கிறார்கள். இது ஏல நடவடிக்கையில் உள்ள பெரும் மோசடி.

* ஒரு வங்கி, வாடிக்கையாளரிடம் காட்ட ஒரு கணக்கும்; ஆர்.பி.ஐ.யிடம் காட்ட இன்னொரு கணக்கையும் பராமரித்து வந்திருக்கிறது. பிக் பாக்கெட் அடிப்பதை போல, வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் தொகையை சட்டவிரோதமான முறையில் வசூலித்தும் இருக்கிறது. அவ்வாறு வசூலித்த தொகைகளை வங்கியின் இலாப கணக்கிற்கும் எடுத்து சென்றிருக்கிறது. இது, கீழிலிருந்து மேல் அதிகாரிகள் வரையில் தெரிந்தே நடந்திருக்கும் கூட்டுக்கொள்ளையாகவும் அமைந்திருக்கிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதுபோன்ற, வங்கியின் மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையிலும், வங்கியின் மோசடிகளுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி அதில் வெற்றியடைந்த நம்பிக்கை கதைகளையும்; பெரும் பண பலத்தோடும் அதிகார பலத்தோடும் அலைக்கழிக்கப்படும் நிலையில், அதனை கண்டு சோர்வடையாமலும் துணிச்சலாகவும் இன்றுவரையிலும் சட்டப்போராட்டங்களை நடத்திவரும் நம்பிக்கை மனிதர்களின் கதைகளையும் அங்குசம் தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கிறது.

 

அதன் பதிவுகள் இதோ …

 

Flats in Trichy for Sale

18 ஆண்டு உழைப்பு… கோடிகளில் பிசினஸ்… எல்லாமே போச்சு! தெருக்கோடியில் நிறுத்திய பிரபல வங்கி!

வீட்டு பத்திரத்தை தர மறுத்த பிரபல வங்கி ! அதிர்ச்சி வைத்தியம் தந்த நீதிமன்றம் !

போர்ஜரி கையெழுத்து ! மோசடி ஆவணங்கள் ! சிக்கலில் சிட்டி யூனியன் வங்கி !

இவ்வளவு குரூரமான வங்கியை பார்த்ததே இல்லை… அம்பலப்படுத்தும் தொழிலதிபர் வேணுகோபால் !

தில்லு முல்லு ! பிரபல வங்கிக்கு அபராதம் ! வங்கி அதிகாரிக்கு சிறை தண்டனை !

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.