முட்டுச்சந்தில் சிக்கித்தவிக்கும் நியோமேக்ஸ் ! அன்றே சொன்ன அங்குசம் -பாகம் 02

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியோமேக்ஸ் மோசடி விவகாரம் வெளியான முதல் நாளில் இருந்து அங்குசம் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறது. நியோமேக்ஸ் வழக்கு விவகாரம் குறித்து அங்குசம் புலனாய்வு செய்து வெளியிட்ட செய்திகளின் தொகுப்புகள் இதோ …

2023 – ஆகஸ்டு 31

Kauvery Cancer Institute App

நாங்கள் நிதிநிறுவனம் அல்ல. DTCP, RERA அனுமதி பெற்று ரியல் எஸ்டேட் தொழில்தான் செய்கிறோம். தமிழகத்தில் எங்களுக்கு நிறைய புராஜெக்ட்டுகள் இருக்கின்றன. அவற்றுக்காக, அவர்கள் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.” என்று நீதிமன்றத்தில் பச்சையாக புளுகியிருக்கிறது நியோமேக்ஸ்.

வெளிப்படையான விளம்பரங்கள் செய்து பணத்தை பெறாமல், எம்.எல்.எம். கம்பெனிகளின் பாணியில், ஆளுக்கு ஏற்றார்போல ஆடம்பர ஹோட்டல்களில் பிரமிப்பை காட்டி கவிழ்ப்பதில் தொடங்கி, திண்ணைப்பேச்சு பேசி மயக்குவது வரையில் தந்திரமான முறையில் பணத்தைக் கறந்திருக்கிறது, நியோமேக்ஸ். இதற்காக, எந்த ஒரு பிட் நோட்டீசும் வழங்கப்படுவது கிடையாது. திட்டங்களை விளக்கி சொல்வதற்கான அச்சிட்ட காகிதம் மட்டுமே அவர்கள் கையில் இருக்கும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதைக் காட்டி, வாயில் வடை சுட்டிருக்கிறார்கள். பேச்சு வாக்கில்கூட, வட்டிப்பணம் என்று சொல்வதில்லை. போக்குவரத்து செலவு, அலவன்ஸ், ஆஃபர், டிவிடென்ட், இலாபத்தில் பங்கை பிரித்து தருகிறோம் என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக சொல்லி வசூலித்திருக்கிறார்கள். …

மேலும் விரிவாக படிக்க :

காலணா பெறாத நிலம் கால் கோடிக்கு… கணக்கு முடிக்க நினைக்கும் நியோமேக்ஸ் !

காலணா பெறாத நிலம் கால் கோடிக்கு… கணக்கு முடிக்க நினைக்கும் நியோமேக்ஸ்! வீடியோ

 

வீடியோ பதிவு :

***

 

2023 செப்டம்பர் 27

நியோமேக்ஸில் பணத்தைப் போடாமல், தங்கத்திலும், வங்கியிலும் முதலீடு செய்து இதுவரை நீங்கள் இழந்தது பல கோடி. இப்போதாவது எங்களை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுங்கள்.” என்ற வசிய வார்த்தைகளில் கிறங்கியவர்களெல்லாம் இன்று தலைகிறுகிறுக்கக் கிடக்கிறார்கள். போட்ட பணம் வருமா? என்ற கவலை ஒருபக்கம், வெளியில் சொன்னால் வெட்கம் இன்னொரு பக்கம். முதலீடு செய்த தொகையை வெளியில் சொன்னால், அதற்கு கணக்கு கேட்பார்களோ என்ற பயம் காரணமாகவும் ”பல்க்” ஆக முதலீடு செய்த பலரும் வெளிப்படையாக புகார் அளிக்க முன்வரவில்லை என்கிறார்கள். ..

மேலும் விரிவாக படிக்க :

கோடி கோடியா மக்கள் பணம்.. ஆடித்தீர்த்த நியோமேக்ஸ்.. பரிதவிப்பில் மக்கள்!

கோடி கோடியா மக்கள் பணம்.. ஆடித்தீர்த்த நியோமேக்ஸ்.. பரிதவிப்பில் மக்கள்!

வீடியோ பதிவு :

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

***

2023 – அக்டோபர் 24

குறைந்தபட்சம் ஏலச்சீட்டு நடத்துவதற்குக்கூட ஏகப் பட்ட விதிமுறைகள் கெடு பிடிகளை அரசு வகுத்து வைத்திருக்கிறது என்பதை அறியாத அரைவேக்காடுகள் அல்ல அவர்கள். பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலிப்ப தென்றால் செபியின் அனுமதியை பெற்றாக வேண்டும் என்பதையும் அவர்கள் அறியாதவர்கள் அல்ல. மாறாக, தங்களது குறுக்குப்புத்தியை பயன்படுத்தி, அரசின் விதிமுறைகளை எப்படியெல்லாம் மீறலாம்; எப்படியெல்லாம் பிராடுத்தனம் பன்னலாம் என்பதையெல்லாம் ரூம் போட்டு யோசிச்சிருப்பார்கள் போல !

மேலும் விரிவாக படிக்க :

முட்டுச்சந்தில் சிக்கித்தவிக்கும் நியோமேக்ஸ்!

முட்டுச்சந்தில் சிக்கித்தவிக்கும் நியோமேக்ஸ்!

வீடியோ பதிவு :

***

2023 – செப்டம்பர் 29

அதிக வட்டிக்குக்கும் இரட்டிப்பு பணத்திற்கும் ஆசைப்பட்டது முதல் ஊழல். அதையும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய சொல்லாமல், ”அவன் வங்கிக்கணக்கில் போடு” என்று நியோமேக்ஸ் கை காட்டிய நபருக்கு பணத்தை போட்டது அடுத்த ஊழல். அப்படியும், போட்ட பணத்திற்கும் இடத்தை எழுதிக் கொடுக்காமல், நம்பகமில்லாத வெற்று பாண்டு பத்திரத்தையும் வாயில் நுழையாத பெயர்களை தாங்கிய டுபாக்கூர் கம்பெனிகளின் பெயர்களிலும் ரசீதுகளை வழங்கிய போதும்கூட வாயைத் திறக்காமல் அதனை பத்திரமாக வாங்கி வீட்டு பீரோவில் வைத்து அடைகாத்தது மேலும் ஒரு ஊழல். ”உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்” என்பது, நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு மாத்திரமா என்ன?

மேலும் விரிவாக படிக்க :

நியோமேக்ஸ் மோசடி விவகாரம் : வீதிக்கு வந்த பிறகும் வீட்டில் முடங்கிக் கிடப்பதில் நியாயமில்லை !

நியோமேக்ஸ் மோசடி விவகாரம் : வீதிக்கு வந்த பிறகும் வீட்டில் முடங்கிக் கிடப்பதில் நியாயமில்லை !

 

***

5000 கோடி : நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் ! அன்றே சொன்ன அங்குசம் ! பாகம் – 01

5000 கோடி : நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் ! அன்றே சொன்ன அங்குசம் ! பாகம் – 01

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.