கோடி கோடியா மக்கள் பணம்.. ஆடித்தீர்த்த நியோமேக்ஸ்.. பரிதவிப்பில் மக்கள்!

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

கோடி கோடியா மக்கள் பணம்.. ஆடித்தீர்த்த நியோமேக்ஸ்.. பரிதவிப்பில் மக்கள்!

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பலரும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள், சிறு தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், இலக்கிய மன்றங்கள், நகைச்சுவை மன்றங்கள், எல்.ஐ.சி. நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் மற்றும் பி.எச்.இ.எல். போன்ற பொதுத்துறை நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் என ஓரளவுக்கு காசு புழங்கும் ஆட்களாகப் பார்த்து வளைத்துப் போட்டிருக்கிறார்கள்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...


நியோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் மிக முக்கியமானவர் பாலசுப்பிரமணியன். அரசு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யில் திருச்சி மற்றும் பெரம்பலூர் கிளையில் உதவி மேலாளராக பணிபுரிந்தவர். அதுவரை தான் பார்த்து வந்த பணியை துறந்துவிட்டு, நியோமேக்ஸ் நிறுவனத்தை தொடங்கியவர். எல்.ஐ.சி. நிறுவனம் வழியே கிடைக்கப்பெற்ற வியாபாரத் தொடர்புகளை அப்படியே நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு மடைமாற்றியிருக்கிறார்.
முக்கியமாக, தற்போதும்கூட எல்.ஐ.சி.யில் முகவர்களாக தொடரும் பலரும் நியோமேக்ஸ் நிறுவனத்திற்கும் ஆள்பிடித்துக் கொடுக்கும் ஏஜெண்டாகவும் செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள். திருச்சி நகரை சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜெண்ட் ஒருவர், தனது காரிலேயே நியோமேக்ஸ் நிறுவனத்தின் பெயரை போட்டிருக்கிறார் என்கிறார்கள். அதேபோல, திருச்சியில் பெல் ஊழியர்களை குறிவைத்தும் அந்த வட்டாரத்தில் பெரும் வேட்டை நடத்தப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

நியோமேக்ஸ் நிறுவனர் பாலசுப்பிரமணியன்
நியோமேக்ஸ் நிறுவனர் பாலசுப்பிரமணியன்

செம்ம சூப்பரான திரைப்படம்..

”நியோமேக்ஸில் பணத்தைப் போடாமல், தங்கத்திலும், வங்கியிலும் முதலீடு செய்து இதுவரை நீங்கள் இழந்தது பல கோடி. இப்போதாவது எங்களை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுங்கள்.” என்ற வசிய வார்த்தைகளில் கிறங்கியவர்களெல்லாம் இன்று தலைகிறுகிறுக்கக் கிடக்கிறார்கள். போட்ட பணம் வருமா? என்ற கவலை ஒருபக்கம், வெளியில் சொன்னால் வெட்கம் இன்னொரு பக்கம். முதலீடு செய்த தொகையை வெளியில் சொன்னால், அதற்கு கணக்கு கேட்பார்களோ என்ற பயம் காரணமாகவும் ”பல்க்” ஆக முதலீடு செய்த பலரும் வெளிப்படையாக புகார் அளிக்க முன்வரவில்லை என்கிறார்கள்.

வீடியோ லிங்:

கமலக்கண்ணன்
நியோமேக்ஸ் நிறுவனர் கமலக்கண்ணன்

”எங்கள் மீது புகார் கொடுத்து, நாங்கள் ஜெயிலுக்கு போய்விட்டால் உங்களுக்கு எப்படி பணம் திரும்பக் கிடைக்கும்?” என்று தலைமறைவாக பதுங்கியிருக்கும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஜூம் மீட்டிங்கில், லாஜிக்காக ”லாக்” செய்வதாகவும் சொல்கிறார்கள். போறபோக்க பார்த்தால், ரேஷன் கடையில நிக்கிற மாதிரி மனுவும் கையுமா ஒரு பெருங்கூட்டமே மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் குவிவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் போலீசு வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்களாம்.

4
நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சீல்
நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சீல்

நெல்லையைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில், அந்நிறுவனத்தின் நெல்லை கிளையின் இயக்குநர்கள் சிவகங்கை தேவக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சைமன் ராஜா மற்றும் கபில் ஆகியோரை மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்ற உத்தரவையடுத்து, அவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களின் சார்பாக, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில், வழக்கை அடுத்த ஜூலை 28-க்கு ஒத்தி வைத்திருக்கிறது, சென்னை உயர்நீதிமன்றக்கிளை. வெளிநாடு வாழ் தமிழர்களின் உதவியோடு தப்பிக்க முயற்சிப்பதாகவும், விமான நிலையங்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள நெல்லை நிறுவனத்தின் இயக்குநர்கள் சைமன் ராஜா மற்றும் கபில்
கைது செய்யப்பட்டுள்ள  நியோகேக்ஸ்  நெல்லை  இயக்குநர்கள் சைமன் ராஜா மற்றும் கபில்

தமிழகத்தையும் தாண்டி, வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும் நியோமேக்ஸ் தன் கைவரிசையைக் காட்டியிருப்பதாக சொல்கிறார்கள். நியோமேக்ஸ் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு கூட்டங்கள் வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டிருக்கும் தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. இவ்வாறு, வசூலித்த பணத்தில் அதன் முன்னணி நிர்வாக இயக்குநர்கள், சொகுசான ஆடம்பர வாழ்க்கையை நடத்தி வந்திருப்பதும் தற்போது அம்பலமாகியிருக்கிறது. மதுரையில், முதலில் வாடகை வீட்டில் குடியிருந்த வந்த பாலசுப்பிரமணியன், குறுகிய காலத்தில் அதன் அருகிலேயே இரண்டு இடங்களை விலைக்கு வாங்கி சொகுசு பங்களாவை கட்டியிருக்கிறார். அவரது வீட்டு புதுமனை புகுவிழா நிகழ்வில், அண்டை மாநிலங்களிலிருந்தும் சொகுசு கார்களில் தொழிலதிபர்கள் வந்திறங்கியதாக சொல்கிறார்கள். அவரது வீட்டின் முன்பாக, எப்போதும் நான்கு சொகுசு கார்கள் நின்றதாகவும் சொல்கிறார்கள்.

நியோமேக்ஸ் நிறுவனத்திடம் கைப்பற்ற பட்ட ஆவணங்கள்
நியோமேக்ஸ் நிறுவனத்திடம் கைப்பற்ற பட்ட ஆவணங்கள்

அடுத்து, நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் வீரசக்தி. இவர் 1996-ஆம் ஆண்டு திருச்சியில் ஆல்கம் மெடிக்கல் நிறுவனத்தில் ஒரு சாதாரண மருந்து விற்பணை பிரதிநிதியாக வேலைக்கு சேர்ந்தவர். பின்னர், தில்லைநகர் ஜானகிராமன் மருத்துவமனையில் மெடிக்கல் கடையை திறந்திருக்கிறார். அடுத்து, மருந்து மொத்த விற்பனை ஏஜென்சியை தொடங்கியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து, ஆப்பில் மில்லட் என்ற பெயரில் சிறுதானிய உணவகத்தை திருச்சி மற்றும் சென்னை தி.நகரில் தொடங்கியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் விட, வாவ் மீடியா என்டர்டெய்மெண்ட் என்கிற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அந்நிறுவனத்தின் சார்பில் மூன்று சினிமா படங்களையும் எடுத்திருக்கிறார், வீரசக்தி. 2022 -ஆம் ஆண்டு இந்திய கவர்ச்சி கன்னி சன்னிலியோனை வைத்து ஓ மை ஹோஸ்ட் படம் வெளியான நிலையில்; 2023-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருமேகங்கள் கலைகின்றன படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. அடுத்து, பேரன்பு பெருங்கோபம் படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோடிகளை கொட்டாமல் சினிமாப்படம் எடுக்க முடியாதென்பது, தெருக்கோடியிலிருப்பவனுக்கும் தெரிந்த உண்மை. அதுவும் சன்னிலியோனை வைத்து படம் எடுத்திருக்கிறார் எனில், எவ்வளவு பணத்தை அதில் வாரியிறைத்திருப்பார்? என பெருமூச்சு விடுகிறார்கள்.

வீடியோ லிங்:

– வே.தினகரன், ஷாகுல், படங்கள் : ஆனந்த்

5
Leave A Reply

Your email address will not be published.