அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதா?

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கையை திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு – SFD முன்வைத்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கையில்,
”வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் கனவை நோக்கிச் செல்லும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் TVK தலைமையிலான தமிழ்நாடு அரசையும் சமூக நீதி அமைச்சகத்தையும் திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு (SFD) வன்மையாகக் கண்டிக்கிறது!
1. அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு செய்யும் இறுதி தேதி, தற்போதைய TVK தலைமையிலான தமிழ்நாடு அரசால் நீட்டிக்கப்படவில்லை. இத்திட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட முன்னோடியான திட்டங்களில் ஒன்றாகும்.
2. இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த பல மாணவர்கள் இதுவரை தங்களது சேர்க்கை ஒப்புதல் கடிதங்களை (Offer Letters) பெறவில்லை. சில மாணவர்கள் இறுதி தேதி முடிந்த பிறகே ஒப்புதல் கடிதங்களைப் பெற்றுள்ளனர்.
3. அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் திட்டத்தின் இணையவழி விண்ணப்பத்தில் பழைய நிரந்தர சாதிச் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல், புதிய சாதிச் சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதனால் பல மாணவர்கள் புதிய சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து, அவை வழங்கப்படுவதற்காக காத்திருக்கின்றனர்.
4. மேலும், முதல் தலைமுறை மாணவர்கள் பலர் கடவுச்சீட்டு (Passport) பெறுவதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் திட்ட இணையதளத்தில் தற்போது கடவுச்சீட்டு கட்டாயமில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், விண்ணப்பங்களை கடவுச்சீட்டு இன்றி தொடர இயலவில்லை.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆதிதிராவிடர் நலத்துறைக்கும், சமூக நீதி அமைச்சகத்திற்கும் மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தாலும், இதுவரை எந்தவிதமான பதிலும் வழங்கப்படவில்லை.
இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு (SFD), 05.06.2026 அன்று தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

எனவே, ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அறிவிக்கப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பங்களின் இறுதி தேதியை மேலும் 30 நாட்கள் நீட்டிக்குமாறும், ஆண்டுக்கு இரண்டு முறை விண்ணப்பிக்க அழைப்பு விடுக்குமாறும் தமிழ்நாடு அரசையும் சமூக நீதி அமைச்சகத்தையும் திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு (SFD) வலியுறுத்துகிறது.” என்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

— அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.