ஜனவரி 22-ல் ஜி.வி. பிரகாஷ் குரலில் திருவாசகம்!

தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பு திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குரலில்  வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப் பூர்வ YouTube சேனலில் வெளியிடப் பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பிரதமர்  நரேந்திர மோடி முன்னிலையில்  இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் ஜி.வி.பி.

திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அந்த கனவின் முதல் படியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து, அவற்றை உலகிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாரம்பரிய ஆன்மிகப் பாடல்களை இன்றைய தலைமுறை யும் எளிதாக உணரச் செய்யும் வகையில், இசை வடிவமைப்பில் புதிய அணுகுமுறையை அவர் கையாண்டுள்ளார்.

— ஆண்டவர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.