அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கோயிலுக்கு சொந்தம் கொண்டாடி … பழமையான சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பல் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டம் துறையூரில் மூங்கில் தெப்பக்குளம் அருகில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது . கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள வசந்த மண்டபத்தின் மீது முகப்பில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இருந்த சாமி சிலைகளை அறநிலையத்துறையை  தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பெண் உள்ளிட்ட மூன்று நபர்கள் தூண்டுதலின் பேரில் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

காசி விஸ்வநாதர் கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது ஒரு சில பணிகள் மட்டும் முடிவு பெறாமல் இருந்தது. இந்நிலையில் கோவிலின் நுழைவாயிலில் உள்ள வசந்த மண்டபத்தின் முகப்பில் மார்க்கண்டேயனின் வரலாற்றை கூறுவது போல அகத்தியர் காசி விஸ்வநாதர், அர்ச்சகர் பரிசாரகர் எமராஜர் மார்க்கண்டேயர், 2 சிவலிங்கங்கள், 2 நந்தி சிலைகள் , கண்ணப்ப நாயனார் அரக்கர் சிலை 2, சிவன், பார்வதி உள்ளிட்ட சுமார் 15 சுதை வடிவத்திலான சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இந்நிலையில் கோவில்  அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றாலும்  ஜெயலட்சுமி, ஸ்ரீதர் , நக்கீரன் உள்ளிட்ட  சிலர் நபர்கள் கோவிலை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்து கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் வசூலித்து கோவிலை நடத்தி வந்தனர்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

காசி விஸ்வநாதர் கோவில் இந்நிலையில் கோவிலின் முன் மண்டபத்தின் மீது அமைந்துள்ள சாமி சிலைகளுக்கு வர்ணம் பூச சில தனியார் அமைப்பினர் அறநிலையத்துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களிடம் அனுமதி கூறாமல் அறநிலையத்துறையிடம் அனுமதி கூறியதால் ஆத்திரத்தில் முன் மண்டபத்தின் மீது இருந்த சிலைகளை இடித்து அகற்றி சேதப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாவரும் கேளீர்

மேலும் இது பற்றி தகவல் அறிந்த கோவில் செயல் அலுவலர் ராஜகோபால், கோவில் ஆக்கிரமிப்பாளர்களான  ஜெயலட்சுமி, ஸ்ரீதர், நக்கீரன் உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட மூன்று நபர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காசி விஸ்வநாதர் கோவில் பட்டப் பகலில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலில் சுமார் 20 வருடத்திற்கும் மேலாக அமைக்கப்பட்டிருந்த  சிலைகளை உடைத்தது பக்தர்களிடையே பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்து அமைப்பினர் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.