அங்குசம் சேனலில் இணைய

போக்கு காட்டிய பொதுக்குழு ? அடி சறுக்கிய அன்புமணி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மாவட்டம் தோறும் பொதுக்குழு உறுப்பினர்களை கூட்டி கையெழுத்து பெற்று  கட்சியை கைப்பற்றுவதற்காகவே உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி முயன்று அதன் விளைவாக  இரு  பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக   அக்கட்சியினர் கூறுகின்றனர்.

சமீபத்தில் நடத்தப்பட்ட பாமக பொதுக் குழுவில் காலியாக இருந்த இளைஞரணி தலைவர் பதவியை தனது  மகள் வழி பேரன் முகுந்தனுக்கு கொடுத்தார்  டாக்டர் ராமதாஸ்,  அந்த பதவியை தனது  2-வது மகளுக்கு வழங்க வேண்டுமென  அன்புமணி கோரிக்கை வைத்த நிலையில்  இதுவே இருவரின் மோதலுக்கு தொடக்கப்புள்ளியானது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அதன் தொடர்ச்சியாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக முற்றி தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து, மூத்த நிர்வாகிகள் , குடும்பத்தினர்  சமாதானம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் , கட்சி நிர்வாகிகளை  ராமதாஸ் நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் , அதேவேளையில்  நீக்கப்பட்டவர்களை மீண்டும் அதே பொறுப்பில் தொடர்வதாக அன்புமணி கடிதம் வழங்கி வருவது தொடர்ந்து வருகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ராமதாஸ்
ராமதாஸ்

இதனால் அதிர்ச்சியடைந்த ராமதாஸ் , அவரது தாயார் மீது பாட்டிலை வீசினார், காடுவெட்டி குருவை கீழ்த்தரமாக நடத்தினார், தைலாபுரத்தில் 6 அடியாட்களை வைத்துள்ளார்.

அன்புமணியும், சவுமியாவும் எனது கால்களை பிடித்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்கவிட்டால், நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்கணும் என அழுதார்கள், 2026 தேர்தலுக்குப் பின் தலைவர் பதவியை அன்புமணிக்குக் கொடுப்பதாகக் கூறினேன். ஆனால் நடப்பதைப் பார்க்கும்போது என் மூச்சுக் காற்று அடங்கும் வரை பதவியைக் கொடுக்க மாட்டேன்”  என்று கூறி  அன்புமணியை அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றார்

அதற்கு பதிலடியாக தனிக் கட்சியை துவங்கி கொள் என தன்னிடம் மூன்று முறை அய்யா ராமதாஸ் சொன்னதாக சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் கொளுத்தி போட்டார்.

போக்கு காட்டிய பொதுக்குழு?

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் – என்ற பெயரிட்டுக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில்  முதல் பொதுக்குழுவை கூட்டி உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றார் அன்புமணி

திருப்பத்தூர், திருவண்ணாமலை ,வேலூர், ராணிப்பேட்டை . கள்ளக்குறிச்சி, தொடர்ந்து  ,சேலம், தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை அன்புமணி நடத்திய நிலையில், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ இரா.அருள் மற்றும் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவும் பாமக கவுரவத் தலைவருமான ஜி.கே.மணி’யும்  நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகளில்  அடுத்தடுத்து   அட்மிட் ஆனார்கள்.

அன்புமணி கூட்டத்தில் கலந்து கொண்டால் , ராமதாஸின் கோபத்துக்கு ஆளாக வேண்டியவரும், கலந்துக் கொள்ளவில்லயென்றால் அன்புமணியின் கோபத்திற்கும்  ஆளாக வேண்டிய வரும்  என நினைத்தே அவர்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக பாமகவினரால்  விமர்சிக்கப்பட்டது.

அடி சிறுக்கிய அன்புமணி?

மாவட்டந்தோறும் பொதுக்குழுவை கூட்டி கட்சியை கைப்பற்றும் நிகழ்வை தற்போது ஒத்திவைத்த அன்புமணி, தமிழ்நாட்டிற்கு ஒரு விடிவு கொண்டு வர வேண்டும். அதற்காக ஜூலை 25- ம் தேதி அய்யா  பிறந்த நாளன்று ஒரு நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன்.  என தர்மபுரி பொதுக்குழு கூட்டத்தில் பேசிவிட்டு சென்ற நிலையில். அன்புமணி மற்றும்  குடும்ப உறுப்பினர்களை தவிர்த்துவிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ் , சொன்னது போலவே நடைபயணமும்  செல்லவில்லை  ‘ஆரம்பத்திலே அடி சறுக்கியதால்”  கட்சியை கைப்பற்றும் நிகழ்வை தற்போது ஒத்திவைத்ததாக கூறப்படுகிறது.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

பொதுக்குழு கூட்டம்தர்மபுரி பொதுக்குழுவில் கலந்துக்கொண்ட மூத்த நிர்வாகிகள்  பெயரை தவிர்துவிட்டு பேசியவர்கள் எங்களிடமும்  சிலர் வந்து நோட்புக்கில் கையெழுத்து பெற்றார்கள்  சிலர் மட்டுமே கையெழுத்திட்டிருந்தனர்  “அய்யா ராமதாஸிடம் தான் கட்சி உள்ளது. அவர் பக்கம் தான் எங்கள் சமூகத்தின் வாக்காளர்கள் உள்ளனர்.  அய்யாவை பார்த்து தான் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிகள் வரும் , இடங்களை ஒதுக்கும். அன்புமணியிடம் யாரும் பேச மாட்டார்கள்.

சமீபத்தில்  சமாதானம் ஆனதுபோல ஒரு தோற்றம் ஏற்பட்டது. ஆனால், நடக்கவில்லை. மாவட்டம்தோறும் பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதை தேர்தல் ஆணையம் ஏற்பதற்கு வாய்ப்பில்லை , மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் அன்புமணிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினாலும் ஒட்டுமொத்த பொதுக்குழுவை கூட்டுவதற்கு அன்புமணியால் முடியாது அது அய்யாவால் மட்டுமே முடியும்.

பன்ரூட்டி ராமச்சந்திரன்,  ‘தீரன் ஆகியோர்களும் போட்டி பாமகவை ஆரம்பித்து தேர்தல் ஆணையத்திடம் தோற்றுப்போன வரலாறு உண்டு என்றார்கள்.

பாஜகவோடு  கூட்டணி அடம்பிடிக்கும் அன்புமணியின்  ரகசியமென்ன? 

2004க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில். மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி , உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எம்பிபிஎஸ்  சேர்க்கைக்கான புதுப்பித்தலை சட்டவிரோதமாக வழங்கியதாகவும், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் சேர்க்கையைத் தொடர  அவர் அனுமதித்ததில் ரூ-350 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக மத்தியப் புலனாய்வுத் துறை  வழக்குகள் பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது . அந்த வழக்கில் கைதாகாமல் இருக்கவே,  பாஜகவை எதிர்க்க முடியாமல்  கூட்டணியில் தொடர்ந்து வருகிறது இதைதான் அன்புமணியும் அவரது மனைவியும் பாஜகவோடு கூட்டணி தொடர வேண்டுமென காலை பிடித்து அழுதார்கள் என்று தற்போது ராமதாஸ் கூறியது குறிப்பிடதக்கத்தக்கது.

அன்புமணி செயல்பாடுகளில் தடுமாற்றமுள்ளது  அவரை  பின்னாலிருந்து யாரோ?  இயக்குவதாகவும்  அதற்காக முகுந்தனை பகடைக்காயாக பயன்படுத்தி விட்டதாக ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அன்புமணி
அன்புமணி

அன்புமணியை தனிக்கட்சி ஆரம்பிச்சுக்கோ என தெரிவித்திருக்கிறார் அய்யா அவர்கள். அப்படி என்றால் கட்சியை விட்டு அன்புமணியை நீக்கும் திட்டம் ராமதாஸிடம் இருந்திருக்கும் அல்லவா? அதன் வெளிப்பாடு தானே இது? அப்படியென்றால் ராமதாசை இயக்குவது யார்? முகுந்தனை பகடை காயாக பயன்படுத்துபவர்கள் யார்?  அய்யா ராமதாஸ் பின்னாடி  முகம் தெரியாத யாரோ ஒரு நபர்தான் இத்தனை பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள்  அன்புமணி ஆதரவாளர்கள்.

கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்  என்பது போல  பாமக கட்சி சின்னம் பறிபோகும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதை பாஜக தலையீட்டு காப்பாற்றி வருகிறது , ஒருபக்கம் ஓட்டு வங்கியும்  குறைந்து போய் அன்புமணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார் , இதை தாமதமாக உணர்ந்த ராமதாஸ் பாஜக கூட்டணியில் தொடர விருப்பமில்லாமல் அன்புமணியை ( ஊழல் வழக்கில் கைதுக்கு )  பலிகொடுக்க தயாராகிவிட்டதாகவும்  அவர் திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டுமென்பதே தற்போதைய கட்டாயத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு  குறைவான காலமே உள்ளதால், என்டிஏ கூட்டணியில்  பாமகவை இனைக்க  அமித்ஷாவும், பழனிசாமியும் அடுத்தமாதம் ஜூலை 8 ஆம் தேதி சென்னையில் சந்தித்து பேச உள்ளனர் , அன்றைய தினமே டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஒன்றினைந்து கூட்டணியை இறுதி செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடப்பாடி அமித்ஷா உணவு விருந்து
எடப்பாடி அமித்ஷா உணவு விருந்து

அமித்ஷா வருகை குறித்த தகவல் வெளியான பின்பும் , தங்களது கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கு திமுகவே காரணம் என அன்புமணி கூறியிருப்பது அரசியலில் கவனம் பெற்றது   அதனை உடனடியாக மறுத்த ராமதாஸ் இது அப்பட்டமான, கடைந்தெடுத்த பொய்,” என்று பதிலடி கொடுத்தார்

இருவருக்குமிடையே வார்த்தை போர் தொடரும் நிலையில் பாமகவில் உட்கட்சி பிரச்சனை முடிவடையுமா  ? அதே நேரத்தில் அய்யாவும் சின்னய்யாவும் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்  ? கட்சி யார் கைக்கு போகும் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்திலும் பாமக தொண்டர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

—  மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.