அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தனியார்வசம் சென்றால் சமத்துவமும் இருக்காது, சமூக நீதியும் இருக்காது !

திருச்சியில் அடகு நகையை விற்க

”உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு மக்களாட்சி மாண்புகளை உயர்த்திப் பிடித்திருக்கிறது” என்பதாக, அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழி வகுக்கும் மசோதாவை திரும்பப்பெறும் அரசின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் சார்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

அவ்வமைப்பின், தலைவர் முனைவர் பி. இரத்தினசபாபதி மற்றும் பொதுச்செயலர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், ”மக்களாட்சியில் அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றும் போது அதை மக்கள் விரும்பவில்லை என்றால் அதை திரும்பப் பெறுவது அரசின் ஜனநாயகத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு
பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு

அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழி வகுக்கும் மசோதா ஏழை எளிய மக்களின் கல்விக் கனவை சிதைக்கும் செயல், அதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என்ற மாணவர்கள், ஆசிரியர்கள் குரலுக்கு செவிமடுத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மசோதாவை திரும்பப் பெற்று மறு ஆய்விற்கு உட்படுத்தி உள்ளது, தமிழ்நாடு மாநிலத்தில் மக்கள் விரும்பும் மக்களாட்சி நடக்கிறது என்பது வெளிப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசிற்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.

https://www.livyashree.com/

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

மறு ஆய்வு என்பதைக் கடந்து, முழுமையாக மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை.

பிட்டி தியாகராயர், பச்சையப்பர்,  பி.டி. லீ. செங்கல்வராயர் உள்ளிட்ட பெருமக்கள், அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் கல்விக் கிடைக்க வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்தில் கல்வி நிறுவனங்களை நிறுவினர்.

அரசு நிர்வாக மான்யம் மற்றும் ஆசிரியருக்கான ஊதியமும் வழங்கியது. அதன் பயனாக, உயர் கல்வித் துறையில் மாணவர்கள் சேர்க்கை இந்திய அளவைவிட இரண்டு மடங்கு தமிழ்நாடு மாநிலத்தில் அதிகமானது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அத்தகைய அரசு உதவிபெறும் நிறுவனங்களை அழித்தொழிக்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கை 2020 அமைந்துள்ளது என்பதாலேயே தேசிய கல்விக் கொள்கை 2020 ஏற்கத்தக்கதல்ல என்று மக்கள் நிராகரித்தனர்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களா மாற்ற அனுமதித்தால், தேசியக் கல்விக் கொள்கை 2020 யின் அடிப்படையில் அவை பல்நோக்கு உயர் கல்வி நிறுவனங்கள் மாறி மிகப் பெரும் கட்டணக் கொள்ளையில் ஈடுபட வழிவகுக்கும்.

“பல்கலைக்கழகமாக மாறியவுடன் அரசின் மான்யம் நின்று போகும்” என்று மசோதா விவாதத்திற்கு பதில் அளித்து பேசும் போது மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் சட்டப் பேரவையில் தெளிவுபடுத்தி உள்ளார்.

கோவி செழியன்
கோவி செழியன்

அரசு மான்யம் நிறுத்தப்பட்ட பின்னர் மாணவர்கள் சேர்க்கையிலும், ஆசிரியர், அலுவலர், ஊழியர் நியமனத்திலும் எப்படி 69% இட ஒதுக்கீடு சாத்தியப்படும்? கட்டணம் பன்மடங்கு உயர்வதை எப்படி தடுக்க முடியும்? இன்றைய தேதியில் இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழகங்களில் கட்டணத்தை யார் கட்டுப்படுத்த முடிகிறது? எங்கே இட ஒதுக்கீடு?

தனியார் வசம் உயர் கல்வி சென்றால் சமத்துவமும் இருக்காது, சமூக நீதியும் இருக்காது.

அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழிவகுக்கும் மசோதாவை மறு ஆய்விற்கு உட்படுத்துவது என்பதன் பொருள், ஆபத்தை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறோம் என்பதே ஆகும்.  மசோதாவை முற்றிலுமாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை வலுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ்நாடு அரசைக் கோருகிறது.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

–    அங்குசம் செய்திப்பிரிவு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.