பெண்கள் நின்றால் ”பெப்பே” … ஊர்க்காரன் என்றால் தெருமுனையிலேயே ”பிக்கப் – டிராப்” … அரசுப் பேருந்து ஓட்டுநரின் அடாவடி !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

பெண்கள் நின்றால் ”பெப்பே” … ஊர்க்காரன் என்றால் தெருமுனையிலேயே ”பிக்கப் – டிராப்” … அரசுப் பேருந்து ஓட்டுநரின் அடாவடி !

“ஊர்க்காரன் சொந்தக்காரன் பஸ்ல வந்தா, அவங்க ஏரியாவிலேயே பஸ்ஸ நிப்பாட்டுராரு. வேலைக்கு போற பெண்கள் பஸ்டாப்பில் நின்னாலும் கண்டுக்காம போறாரு. பின்னாடியே வண்டி வருது அதுல வாங்கனு சொல்லிட்டு போறாரு..”னு அரசுப்பேருந்து ஓட்டுநர்களின் அடாவடி குறித்து குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர் திருச்சியைச் சேர்ந்த பெண்கள் சிலர்.
நவலூர் குட்டப்பட்டு வரை செல்லும் வழித்தடம் (20 A) கொண்ட அரசு நகரப் பேருந்து ஓட்டுநர் குறித்துத்தான் இந்தக் குறிப்பான குற்றச்சாட்டு.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

“கடந்த டிசம்பர்-17 அன்று காலை 11.30 மணிக்கு கள்ளிக்குடி பேருந்து நிறுத்தத்தில் என்னோடு சேர்ந்த 5, 6 பெண்கள் நின்று கொண்டிருந்தோம். எங்களை நிறுத்தி ஏற்றாமல், பின்னாடி வரும் வண்டியில் ஏறி வாருங்கள் என சைகைகாட்டிவிட்டு சென்றுவிட்டார்.”

“இந்தக் குறிப்பிட்ட பேருந்தின் ஓட்டுநர், இராம்ஜி நகர் அருகேயுள்ள முல்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது உறவினரோ, தெருவைச் சேர்ந்தவரோ இவர் டூட்டியில் இருக்கும்போது பயணித்தால், பேருந்து நிறுத்தமே இல்லாத போதும், இராம்ஜி நகர் பஞ்சுமில் பேருந்து நிறுத்ததிற்கும் கள்ளிக்குடி பேருந்து நிறுத்ததிற்கும் இடையே அவர்களை பொறுப்பாக இறக்கிவிட்டுத்தான் செல்வார். அதே பேருந்தில் தொடர்ந்து பயணிப்பவர் என்பதலிருந்து சொல்கிறேன். பலமுறை, அவர் இவ்வாறு செய்திருக்கிறார்.

3

மாறாக, முறையான பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நின்றாலும், நடு ரோட்டுக்கே வந்து கையை காட்டி மறித்தாலும், பின்னாடி பஸ் வரும் ஏறி வாருங்கள் என சைகை காட்டி விட்டு நிற்காமல் சென்றுவிடுவார். அதுவும் பெண்கள் மட்டுமே நின்றால், ஓ.சி. டிக்கெட்னு பேருந்தை நிறுத்தவே மாட்டார்.

பேருந்திலோ, பேருந்து நிறுத்தத்திலோ கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருந்தால் அவ்வளவுதான். பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல், கொஞ்சம் தூரம் தள்ளிதான் நிறுத்துவார். வேலைக்குப் போகும் பெண்களும் வயதானவர்களும் ஓடிச்சென்றுதான் ஏற வேண்டும். அப்போதும், சிலர் படிக்கட்டில் முழுமையாக ஏறுவதற்குள்ளாக பேருந்தை மெதுவாக இயக்க ஆரம்பித்துவிடுவார். இதனால், பலமுறை பலர் கீழே விழுந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அவ்வாறு வேலைக்கு போகும் அவசரத்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறும் பெண்களிடம், வேற பஸ்ல போக வேண்டியதுதானேனு எரிந்துவிழுவார்.

4

இதுபோல தொடர்ச்சியாக நடந்த நிலையில், பயணி ஒருவர் இந்தக் குறிப்பான ஓட்டுநர் மீது புகார் தெரிவித்து இருக்கிறார். ஆனாலும், எந்த மாற்றமும் இல்லாமல் தனது அடாவடியை தொடர்ந்து வருகிறார்.” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுகின்றனர், பாதிக்கப்பட்ட பெண்கள்.

மேலும், இதே வழித்தடத்தில் கொட்டப்பட்டி வரை இயக்கப்படும் தடம் எண் (120) கொண்ட நகரப்பேருந்தின் ஓட்டுநர்களும், அவ்வப்போது இதுபோலவே நடந்துகொள்கிறார்கள் என்கிறார்கள்.

குறிப்பாக, இந்த குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் மத்திய பேருந்து நிலையத்தினுள் உள்ளே நுழைந்து பயணிகளை ஏற்றி – இறக்கவிட்டு தான் செல்ல வேண்டும் என்ற நிலையில், சில நேரங்களில் மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியிலேயே, காமராஜர் சிலை அருகிலேயே பயணிகளை மட்டும் இறக்கிவிட்டு தேவர் சிலை வழியாகவே வெளியேறிச் சென்றுவிடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக, இரவு 8 மணிக்கு மேலாக இயக்கப்படும் பேருந்துகள் இந்த நடைமுறையை வழக்கமாக்கியிருக்கின்றனர். குறித்த நேரத்தில் அவர்கள் டூட்டியை முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில் இவ்வாறு செய்கின்றனர். அன்றாடம் வயிற்றுப்பிழைப்புக்கு வேலைக்கு வந்துவிட்டு வீடு திரும்ப காத்திருக்கும் நிலை என்ன ஆவது? அதுவும் எங்களைப் போன்ற பெண்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்? ” என திகைத்து நிற்கிறார்கள், அன்றாடம் இத்தகைய அடாவடியை எதிர்கொண்டுவரும் பெண்கள்.

இதே வழித்தடத்தில் ஏற்கெனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்ற பொழுதே அங்குசம் இணையத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம். சம்பந்தபட்ட கிளை மேலாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தோம். அப்போது, “பேருந்து எண், நேரம், தேதி ஆகியவற்றோடு குறிப்பான விவரங்களோடு புகாராக தெரிவியுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறோம்.” என்பதாக தெரிவித்திருந்தார்கள்.

இதனை சொன்னதுதான் தாமதம், “இப்பவே இருட்டிருச்சி மணி எட்டாயிருச்சினு பஸ்ஸ பாத்திட்டு நிப்போமா? நிக்காம போற பஸ்ஸூ, பஸ் ஸ்டாண்டுக்குள்ள உள்ள வராம வெளியே போற பஸ்ஸோட நம்பர் என்னனு பேப்பர் பேனாவுல குறிச்சிட்டு இருப்போமா?”னு எதிர்கேள்வி கேட்கிறார்கள், பாதிக்கப்பட்ட பெண்கள்.

அங்குசம் செய்திப்பிரிவு.

தொடர்புடையை பதிவுகள்:

”ஓ.சி.யில போறோம்னு இளக்காரமா போச்சு!” அரசுப் பேருந்தில் பெண்கள் படும்பாடு!
https://angusam.com/women-suffer-in-the-government-bus/
https://youtu.be/dD0c-Ghrl2U

வீடியோ லிங்:

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.