அங்குசம் பார்வையில் ‘சபாநாயகன்’.  படம் எப்படி இருக்கு !             

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘சபாநாயகன்’.  படம் எப்படி இருக்கு !             

தயாரிப்பு: க்ளியர் வாட்டர் ஃபிலிம்ஸ், ஐ சினிமா.  டைரக்டர்: சி.எஸ்.கார்த்திகேயன், ஆர்ட்டிஸ்ட்ஸ்: அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், மேகா ஆகாஷ், சாந்தினி, விவ்யாசந்த், அருண், ஸ்ரீ ராம், ஜெயசீலன், ஷெர்லின் சேத், துளசி, ஷ்ரவந்தி, ரேஷ்மி நம்பியார்.ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ், இசை: லியோன் ஜேம்ஸ், எடிட்டிங்: கணேஷ் சிவா, பிஆர்ஓ: சதிஷ்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

ப்ளஸ் ஒன் படிக்கும் போது இஷாவை ( கார்த்திகா முரளிதரன்) லவ் பண்ணுகிறார் சபாநாயகன் (எ) அரவிந்த் ( அசோக் செல்வன்) அந்த லவ் பிரேக்கப் ஆகிறது. அடுத்து என்ஜினியரிங் காலேஜ்ல படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அதுவும் புட்டுக்கிருது. வெறும் ‘லவ் மேட்’ டா மட்டும் இருக்கக் கூடாது, Soul Mate ‘ ஆகவும் இருக்கணும் என நினைக்கும் அசோக் செல்வன், மூன்றாவதாக மேகா ஆகாஷ் மீது க்ரஷ் ஆனாலும் அதை சொல்லத் தயங்குகிறார்.

இந்த மூணாம் லவ்வாவது அசோக் செல்வனுக்கு ‘செட்’ ஆச்சா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘சபாநாயகன்’. இப்ப இருக்கும் ஸ்டூடண்ட்ஸ் பல்ஸ் ரேட்டை கச்சிதமாக ‘கேட்ச்’ பண்ணி, ஆபாசம் கலக்காமல் ‘குட் லவ் ‘ ஃபீலிங்குடன் ஜாலியான சபாநாயகனை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன். அசோக் செல்வன் நடிப்பு ஆஹா போட வைக்கிறது. தண்ணி அடித்து போலீசில் மாட்டி , ஜீப்பில் போகும் போது கான்ஸ்டபிள் மயில்சாமியிடம் ஃப்ளாஷ் பேக்கை அசோக் செல்வன் சொல்வது போலத் தான் படம் முழுவதும் நகர்கிறது. லவ்ஸ் பிரேக்-அப் ஆனதைக்கூட ரொம்பவே சோகமாக சொல்லாமல், சின்னச் சின்ன ஜாலி எக்ஸ்பிரஸன் மூலம் அவுட் புட் கொடுத்து அசரடிக்கிறார் அசோக் செல்வன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

Saba Nayagan - சபாநாயகன்
Saba Nayagan – சபாநாயகன்

அதேபோல் அவரது நண்பர்களாக வரும் அருண், ஸ்ரீ ராம், ஜெயசீலன் என எல்லோருமே டைமிங்  காமெடியிலும் பாடி லாங்குவேஜிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி படிப்பைத் தவிர லவ் ப்ரப்போஸுக்காக லோலோவென அலைவது தான் கொஞ்சம் ஓவர்.மூன்று ஹீரோயின்களில் கார்த்திகா முரளிதரன் முதல் இடத்தில் இருக்கிறார். மேகா ஆகாஷுக்கு கடைசி பதினைந்து நிமிடங்கள் தான் என்றாலும் கச்சேரியை களைகட்ட வைக்கிறார்.

இன்னொரு ஹீரோயினும் அசோக் செல்வனின் அக்காவாக வருபவரும் நன்றாக ஸ்கோர் பண்ணியிருந்தாலும் வெள்ளை வெளேர்னு இருப்பதால் கொஞ்சம் அன்னியமாகத் தெரிகிறார்கள்.   கலர் ஃபுல் ஜாலியான இந்த ஸ்கிரிப்ட், மியூசிக் டைரக்டர் லியோன் ஜேம்ஸுக்கு செமத்தியாக செட் ஆகிருச்சு போல. எல்லாமே ஜாலி ட்யூன் தான். கடைசி அரைமணி நேரம் இழுவையாக இருந்தாலும் க்ளைமாக்ஸில் சின்னதா ஒரு ட்விஸ்ட் வச்சு சபாநாயகனுக்கு சபாஷ் போட வைத்துவிட்டார் டைரக்டர் சி.எஸ். கார்த்திகேயன்.         ‌.

-மதுரை மாறன்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.