பள்ளிக் கல்வித் துறையை விளம்பரத் துறையாக மாற்றி வருகிறீர்கள் அமைச்சரே …! – ஆசிரியரின் பகிரங்க கடிதம் !!

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பள்ளிக் கல்வித் துறையை விளம்பரத் துறையாக மாற்றி வருகிறீர்கள் அமைச்சரே …! – ஆசிரியரின் பகிரங்க கடிதம் !!

ஆசிரியர் மனசு -
ஆசிரியர் மனசு –

தமிழக ஆசிரியர் கூட்டணியின் தலைவரும், ஐபெட்டோ அமைப்பின் அகில இந்தியச் செயலருமான வா.அண்ணாமலை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மனம்திறந்த மடல் நீண்ட ஒன்றை தீட்டியிருக்கிறார்.
”ஆசிரியர் சங்கங்களைப் பலவீனப்படுத்தி ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் என்று தனியாசிரியர் ஒருவரைபலப்படுத்துகிறீர்கள் … தங்களின் நேர்முக உதவியாளருக்குக் கூட இல்லாத அதிகாரத்தினை அந்த ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைத்து உள்ளீர்கள் … ஆசிரியர்களுடைய எந்த கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படாமல் பள்ளிக் கல்வித் துறையினை விளம்பரத் துறையாக மாற்றி வருகிறீர்கள்!. .” என காத்திரமான குற்றச்சாட்டுகளை சரவெடி போல தொகுத்தளித்திருக்கிறார், அவர்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

கிருஷ்ணகிரியில்
கிருஷ்ணகிரியில்

அவர் தீட்டிய நீண்ட மடலில், “கடந்த நவம்பர்-25 அன்று, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கல்வித்துறை அலுவலர்களின் மீளாய்வுக் கூட்டத்தின் செயல்முறைகள் பெரிதும் வரவேற்க கூடிய வகையில் நடைபெற்றிருக்கிறது. இயக்குனர்கள் துறைவாரியாக தீர்வு காண வேண்டிய தலைப்புகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தது. மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனைகளை நெறிப்படுத்தி, வழிகாட்டுதல் குறிப்புகளை வழங்கியிருக்கிறார். மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் கலந்து கொண்டு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தீர்வு காண வேண்டிய பிரச்சனைகளை தொகுத்து வழங்கி உள்ளார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடைய மீளாய்வு அறிக்கை தொகுப்பு நாளேடுகளில் செய்தியாக வெளிவந்துள்ளது. எப்போதும் ஆசிரியர்கள் மீது இதயப் பற்றாளராகத்தான் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் உரை அமைந்து வருகிறது.

புதிய கல்விக் கொள்கை முன்னே பள்ளிக்கல்வித்துறை பின்னே !

ஆங்கிலம், கணக்கு பாடங்களை ஆய்வு செய்த போது மாணவர்களுக்கு அடைவுத்திறன் குறைவாக இருந்ததாக வருத்தப்பட்டுள்ளார். ஆங்கிலமும், கணிதமும் சாதாரணமாக மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்கிற திறன் பாடப்பிரிவு அல்ல; என்பதை அமைச்சர் அவர்களும் அறிவார்கள்.

தாங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எமிஸ் இணையதள பதிவுகள், எண்ணும் எழுத்தும் திட்ட ஆன்லைன் பதிவுகள், பயிற்சிகள்… குருவள மைய கூட்டப் பயிற்சிகள், கருத்தாளர்களாக ஏதுவாளர்களாக தொடர்ந்து பயிற்சி… பயிற்சி, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், கலைத் திருவிழாப் போட்டிகள், வானவில் மன்றம், பள்ளி சிறார் திரைப்பட திருவிழா, வினாடி வினா மன்றம், இலக்கிய மன்றம் இத்தனையையும் பட்டியலிட்டு போட்டிகள் நடத்துவதற்கு தான் நேரம் இருக்கிறதே தவிர ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு சில மணி நேரமாவது ஒதுக்கி கொடுத்துள்ளீர்களா?… அல்லது அலுவலர்களையாவது அழைத்து கேட்டிருக்கிறீர்களா?.. பலமுறை ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தங்களை சந்தித்து இதனை விளக்கியும் இதுவரை தீர்வு கண்டுள்ளீர்களா?..
எல்லாமே புதிய கல்விக் கொள்கையை மையப்படுத்தியே தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது என்பதை மறுக்க முடியுமா?..

12.10.2023 டிட்டோஜாக் ஆசிரியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசினீர்களே!.. அழைத்து பேசியபோது 12 கோரிக்கைகள் உடனடியாக தீர்வு காணப்பட்டு அரசாணைகள் வெளிவரும் என்று அறிவித்தீர்களே!.. ஒன்றரை மாதம் கடந்து விட்டது. நிதிசாராத கோரிக்கைகளையாவது அலுவலர்களை அழைத்து கலந்துரையாடி தீர்வு காண முன்வந்து இருக்கின்றீர்களா?… கனவு ஆசிரியர்களை அறிவிக்கிறீர்கள்!.. தாங்கள் நிறைவேற்றுவதாக சொன்ன கோரிக்கைகள் எல்லாம் கனவாகவே தான் மிதந்து கொண்டிருக்கிறது.
யார் இந்த ஆசிரியர் மனசுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்?

ஆசிரியர் மனசுப் பெட்டியை வைத்தீர்கள்!..

ஆசிரியர் மனசு பெட்டி
ஆசிரியர் மனசு பெட்டி

தீர்வு காண்பதற்கான மனசு இருந்தால் தானே மனசுப் பெட்டியில் போடும் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முடியும். இதுவரையில் தமிழ்நாட்டில் கண்டிராத ஒரு புதிய துறையினை தங்கள் காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் உருவாக்கி இருக்கிறீர்கள்!.. ‘ஆசிரியர்கள் மனசுத் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியையும் ஏற்படுத்தியுள்ளீர்கள். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் 2004 இல் இடைநிலை ஆசிரியராக பணிநியமனம் பெற்ற ஆசிரியர் ஒருவருக்கு அந்தப் பதவியினை வழங்கியுள்ளீர்கள். மாநில அளவில் திருச்சியை மையப்படுத்தி அலுவலகம் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கான மாத ஊதியத்தினை அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலர் தான் இன்னமும் வழங்கி வருகிறார்.

அந்த ஆசிரியருக்கு ஏன்?. அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது என்பதை தாங்களே திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறீர்கள். அந்த ஆசிரியர் மனசுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் நடத்திய நிகழ்ச்சியில் நீங்கள் தான் அடுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சராவீர்கள்!.. என்று கூறினார் என்றும், அதேபோல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் ஆகியிருக்கிறேன், என்றும் புளகாங்கிதம் அடைந்து இந்த ரகசியத்தினை வெளிப்படுத்தினீர்கள்.

உங்களை அமைச்சர் ஆக்கியது மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்… அன்பிலார் தொடங்கி மூன்று தலைமுறை உறவுள்ள குடும்பம்… இதை பகுத்தறிவு என்று எடுத்துக் கொள்வதா? அன்பிலாரின் பெயரன் இதயத்திலிருந்து வெளி வருகின்ற உணர்வாக எடுத்துக் கொள்ள இயலுமா?..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சங்கங்கள் அளிக்கின்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வரவில்லை!.. ஆனால் தங்களால் பெயர் சூட்டப்பட்டுள்ள ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் மாவட்டம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறையோடு கல்வியாளர் சங்கமம் இணைந்து பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சியினை முன்நின்று நடத்துகிறார்கள்.

anbil mahesh poyyamozhi press meet
anbil mahesh poyyamozhi press meet

மாண்புமிகு அமைச்சர் அவர்களின் நேர்முக உதவியாளருக்குக் கூட இல்லாத அதிகாரத்தினை அந்த ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைத்து உள்ளீர்கள்! ஆசிரியர்களுடன் அன்பில் என்ற தலைப்பில் நிகழ்ச்சியினை அவர் கல்வியாளர்கள் சங்கமம், பள்ளிக் கல்வித்துறையோடு இணைந்து நடத்தி வருகிறார். அந்தக் கல்வியாளர் சங்கமம் என்பது என்ன அமைப்பு?.. அதில் இடம்பெற்றுள்ள கல்வியாளர்கள் யார்?.. யார்?.. அந்த அமைப்பு அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றதா?.. ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு பள்ளிக் கல்வித்துறைக்கும் கல்வியாளர்கள் சங்கமத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதாவது போடப்பட்டுள்ளதா?.. என்ற எங்கள் ஆசிரியர் சமுதாயத்தின் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரும் எண்ணிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்க செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள் செயல்முறைக் கடிதத்தினை அனுப்பி உள்ளார்கள். அழைப்பிதழையும் அனுப்பி உள்ளார்கள். இந்த கூட்டத்திற்கான செலவுகளை கல்வியாளர்கள் சங்கமம் ஏற்றுக் கொள்கிறதா?.. இல்லை பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக் கொள்கிறதா?.. என்ற ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதில் அறிய விரும்புகிறோம்.

ஒருவர் மனதை இன்னொருவரால் புரிந்து கொள்ள முடியாது!.. அவர் மனதையே அவர் கட்டுப்பாட்டிற்குள் பல நேரங்களில் கொண்டுவரமுடியாது. இந்த நிலைமையில் ஆசிரியர் மனசை ஒருங்கிணைக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள்…

Anbil Magesh
Anbil Magesh

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கெல்லாம் தலைவர் நீங்கள்தான் என்று பெருமையுடன் சொல்லி வருகிறீர்கள்!.. மாவட்டம் தோறும் விழா நடத்தும் போது கோரிக்கைகளை எல்லோரிடமும் தொகுத்துப் பெற்று கோரிக்கைகளை அந்த விழாவில் உங்களிடம் தருகிறார். உடனடியாக நீங்கள் இயக்குனர்களிடம் இந்தக் கோரிக்கைகளை எல்லாம் உடனே நிறைவேற்ற சொல்கிறீர்கள்!.
ஆசிரியர் சங்கங்களைப் பலவீனப்படுத்தி பள்ளிக் கல்வித்துறை அமைச்சகத்தின் தோற்றத்தினை தனியாசிரியர் ஒருவருக்கு அளித்து வளர்த்து விட முடியும் என்று தாங்கள் எண்ணிக்கொண்டு செயல்படவில்லை… என்பதை நாங்கள் அறிந்தாலும், தங்களுடைய செயல்பாடுகள் அப்படித்தான் ஆசிரியர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
பழுத்த பழங்கள் பலர் கண்ட பள்ளிக்கல்வித்துறை !

குழந்தைகள் தின விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் நகைச்சுவை உணர்வுடன் உரையாற்றிய போது, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை பார்க்கின்ற பொழுது எனக்கு பொறாமையாக இருக்கிறது.. அவர் அடிக்கடி மாணவர்களுடன் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று வருகிறார்… என்றும் அந்த நாடுகளினுடைய பெயர்களை எல்லாம் பட்டியலிட்டு சொன்னார்கள்.

வா.அண்ணாமலை.
வா.அண்ணாமலை.

நீங்கள் வெளிநாடு செல்வதை எல்லாம் நாங்கள் பெருமையுடன் வரவேற்கிறோம்!. கொண்டாடுகிறோம்!.. ஆனால் ஆசிரியர்களுடைய எந்த கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படாமல் பள்ளிக் கல்வித் துறையினை விளம்பரத் துறையாக மாற்றி வருகிறீர்கள்!. என்பதை வெளிப்படையாக சொல்கிறோம்!..

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பழுத்த அனுபவம் உள்ளவர்கள் தான் இதுவரை பொறுப்பேற்று நடத்தி வந்துள்ளார்கள். என்றும் அனைவராலும் மதித்துப் போற்றக்கூடிய கல்வித்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள்.. சி.சுப்பிரமணியம் அவர்களும், அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களும், நாவலர் அவர்களும், இனமான பேராசிரியர் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும் வகித்த பதவிகளுக்கு பெருமையினை சேர்த்தவர்கள்… அதேபோல் முந்தைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர்களின் பெயர்ப் பட்டியலைப் பார்த்தால் பொது வாழ்வில் நீண்ட காலம் அனுபவம் உள்ளவர்கள்தான் இருந்தார்கள். அவர்கள் காலத்தில் கூட தனிநபர் விளம்பரத்துறையாக பள்ளிக்கல்வித்துறையை மாற்றவில்லை.

தங்களை முதன்முறையாக நேரில் சந்தித்தபோது உங்கள் தாத்தாவை 1965-66 இல் திருச்சியில் அழைத்து கூட்டம் நடத்தியவன்… என்று அறிமுகம் செய்து கொண்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்!.. என்று நினைக்கிறோம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித் துறையை உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள்!. பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்!.. ஆசிரியர் சமுதாயத்தின் மனசு பெட்டியில் அல்ல; இதயப் பெட்டகத்தில் வைத்து தங்களைப் போற்றுவார்கள்!..
இது விமர்சனமும் அல்ல… விளக்கம் பெறுவதற்காகவும் அல்ல… நம்மை நாமே மனசாட்சியுடன் படித்துப்பார்த்து சரி செய்து கொள்வதற்கான வெளிப்படைத் தன்மையுடன் பதிவு செய்யப்படுகிற புலனப் பதிவாகும்.. நல்லது நடைபெறும் என்ற நம்பிக்கையுணர்வுடன்… வா.அண்ணாமலை!” என ஆசிரியர் சமூகத்தின் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார், அவர்.

– அங்குசம் செய்திப் பிரிவு.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

1 Comment
  1. THAMIL SELVAN S says

    தமிழக பள்ளிக் கல்வித் துறை,
    இதுவரை கண்டிராத,
    மங்குனி அமைச்சர்…
    என்கிற உண்மை அனைவருக்கும் தெரிந்து விட்ட நிலையில்,
    …நீங்களும் விளம்பரத்துக்காக
    நீண்ட மடலை எழுதி….
    கொண்டிருப்பது,
    என்ன நியாயம்,
    ….சினிமா…
    துறையில்… ரசிகர் மன்ற தலைவர்….
    ….விசிலடித்து கை தட்டியவர்,
    …. கல்வித்துறை …பற்றி எந்த அறிதலும் இல்லாதவர், இவரிடம் எப்படி திறனை எதிர்பார்க்கிறீர்கள் இன்னமும்,
    …உண்மையில்…பள்ளிகள் மீது அக்கறை உங்களுக்கு இருக்குமானால்,
    CM ககு புகார் அளியுங்கள்,
    …பள்ளிக்கல்வித்துறை பேராபத்தில்
    இருப்பதை தெளிவாக விளக்கி சொல்லுங்கள்,
    …மகேஷ் பொய்யாமொழி அவர்களால்
    ஒருத்தருக்கு மிக நல்ல பெயர் கிடைத்திருக்கிறது…
    ஆம்…”K A செங்கோட்டையன் சிறந்தவர்,
    என்றை பெயர் பெற …
    இவரே காரணம்

Leave A Reply

Your email address will not be published.