உலகமெங்கும் ஊர் சுற்ற வாய்ப்பளிக்கும் உணவக மேலாண்மை படிப்பு – தொடர் – 4
உணவக மேலாண்மை தொடர் -4
உலகமெங்கும் ஊர் சுற்ற வாய்ப்பளிக்கும் உணவக மேலாண்மை படிப்பு தொடர் – 4 படிக்கும்போதே கோட்டு சூட்டு போட்டு படிப்பது உணவக மேலாண்மை மற்றும் உண வாக்கத்தொழில்நுட்பக் கல்வி. ஆனால் சமையல் கலைஞர் போடும் கோட்டுக்குபேருசெஃப் கோட்டு, படித்து முடித்ததற்கு அப்புறம் கோட்டு போடனும்னா மத்த டிபார்ட்மெண்ட்ல இருக்கணும், அதுவும் ஒரு ஹோட்டல்ல ஜெனரல் மேனேஜர் அதாவது பொது மேலாளர் பதவி மிகப் பெரிய பதவி, முதலாளிகளுக்கு அடுத்து முழு பொறுப்பும் கடமையும் அதிகாரமும் இருக்கிற பதவி, அந்த பொறுப்புக்கு வருவதற்கு சர்வீஸ்ல அனுபவம் இருந்தா தான் தேர்ந்தெடுக்கிறோம்.
குறிப்பா நகரத்துல இருக்கிற நட்சத்திர விடுதிகளுக்கு சர்வீஸ் மேனேஜர்கள் ஜெனரல் மேனேஜரா தேர்ந்தெடுப்போம். நான் பல ஜெனரல் மேனேஜரைதேர்ந்தெடுக்கும் நேரத்தில் சர்வீஸ் அனுபவம் இருப்பவர்களைதேடுவதின் காரணம்; அவர்கள்தான் வாடிக்கையாளர்கள் தேவையை நல்லாபுரிஞ்சு நடக்க வாய்ப்பு அதிகம்ங்குறதுதான்.
அதுமட்டுமில்லாம கேளிக்கை விடுதி அதாவது ரிசார்ட்களில் ஃப்ரண்ட் ஆபீஸ் அனுபவம் இருக்கவங்க தான் அதிகமா தேர்ந்தெடுப் பார்கள், மத்த டிபார்ட்மென்ட் அனுபவத்தில்ஜெனரல் மேனேஜராக முடியாதுன்னு கிடையாது ஆனால் அதிகமாக வாய்ப்பு சர்வீஸ்க்குதான்.
அதுமட்டும் இல்லாம இன்னிக்கு ரொம்ப அதிகமா வேலைக்கு ஆள் தேவைபடுவது சர்வீஸ் டிபார்ட்மென்ட்டுக்குதான், சமைப்பதை விட நல்லபடியா அதை பரிமாறி அதன் மூலமா மேலும் வளர்வதற்கு தான் ஆட்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கு, சர்வீஸ் டிபார்ட்மெண்ட்தேர்ந்தெடுத்தா உடனடியான வேலை கிடைக்குது, சர்வீஸ்க்கு தான் ஆளே கிடைக்கல. நான் எங்க போனாலும், ஹோட்டல் முதலாளிகளும் மேலாளர்களும், அது சின்ன உணவகமா இருக்கட்டும் இல்ல பெரிய பைவ் ஸ்டார் ஓட்டலா இருக்கட்டும் யாராயிருந்தாலும் என் கிட்ட சர்வீஸ்க்கு ஆள் கிடைப்பார்களான்னு தான்கேட்கிறார்கள்.
ஆனால் நாம சமையல் மட்டும் தான் படிப்புன்னு நினைக்கிறோ. நல்லாசமைச்சா போதாது அதை ஒழுங்கா பரிமாறவும் தெரியணும். ஸ்டார் ஹோட்டல்ல என்னென்ன டிபார்ட் மெண்ட்ல வேலை பாக்கலாம்னு போன இதழில் பார்த்தோம், அது இல்லாமஅடுத்தபடியா எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கப்பல் வேலைதான்.
பொதுவாவே கேட்டரிங் படித்த வங்களுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்தான், அதுவும் கப்பல்ல வேலை செய்வதால் நமக்கு நிறைய ஊர் சுத்தவும் முடியும், அது மட்டும் இல்லாம டாலரில்சம்பாதிக்கவும் முடியும். அதனால் அதன் மூலமா நிறைய பேரு லைஃப்ல செட்டில் ஆயிட்டாங்க.
கேட்டரிங் படிக்கிறவங்களுக்கு அது ஒரு பெரிய லட்சியமாகவே இருந்திருக்கு. காரணம் கப்பல்ல வேலை செய்யும்போது சம்பளமும் அதிகம் அதை செலவு பண்றதுக்கு வாய்ப்பும் குறைவு. ஒரு நல்ல தொழிலாளி சம்பாதிச்சு வீட்டுக்கு நிறைய பணம் அனுப்ப முடியும், அதனாலதான் பலபேர் படிச்சு முடிச்சு கொஞ்சநாள் ஸ்டார் ஹோட்டல்ல வேலை பார்த்து எவ்வளவு சீக்கிரம் கப்பலுக்கு போய் சம்பாதிக்கணும்னு ஆசைலகப்பலுக்கு வேலைக்கு போனாங்க, அந்த அனுபவத்தில் அப்படியே பலர் வெளிநாடுகளுக்குப் போய் செட்டில் ஆகி இருக்காங்க.
திரும்பி நம்மஊருலயே வந்து செட்டிலானவங்களும்அதிகம், ரொம்ப வருஷமா கப்பலில் வேலை செஞ்சு பல லட்சம் சம்பாதிக்கிறவங்களும் உண்டு, முன்பெல்லாம் கப்பல் என்று சொன்னால் சமைக்கிறதுக்கு மட்டும்தான் வேலை ஆனா இப்போ சர்வீஸ், ஹவுஸ்கீப்பிங் போன்ற டிபார்ட்மெண்ட்களிலும்அதிகமா வேலைக்கு. ஆள் தேவைப்படுகிறார்கள்.
இதுக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்-கேட்டரிங் படிச்சிருந்தா நல்லது, அதோட ஒரு நல்ல ஹோட்டலில் வேலை பார்த்தா, கப்பலில் எளிதா வேலை கிடைக்கும். ஸ்டார் ஹோட்டல் மற்றும் கப்பல் இல்லாமல் இன்னும் வேற எங்கெல்லாம்இந்த படிப்பு படிச்சா வேலை கிடைக்கும்னு தொடர்ந்து வரும் இதழ்களில் பார்ப்போம்
-தமிழூர் இரா.கபிலன்
முந்தைய தொடரை வாசிக்க…
படிக்கும் போதே கோட்டு சூட்டு போட்டோம் ! உணவக மேலாண்மை தொடர் -3
படிக்கும் போதே கோட்டு சூட்டு போட்டோம் ! உணவக மேலாண்மை தொடர் – 3