மகளிர் சிறப்பு மருத்துவரின் அட்வைஸ்… தாய்பால் புகட்டும் பெண்களுக்கு…

0

மகளிர் சிறப்பு மருத்துவரின் அட்வைஸ்… தாய்பால் புகட்டும் பெண்களுக்கு…

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் போன்றதொரு மிகச் சிறந்த உணவு வேறு எதுவும் இல்லை. இன்றைய நவீன காலத்திலும் பிறந்த குழந்தைக்கு சுமார் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வயது வரை தாய்ப்பால் புகட்டுவது அந்தக் குழந்தையின் உடல்நலனுக்கு மிக மிக நல்லது. எனவே தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கான டிப்ஸ் வழங்குகிறார் மதுரையில் இருக்கும் ஆயுர்வேதா சித்தா மருத்துவர் சந்தோஷிமா கார்த்திகேயன்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

4 bismi svs

தாய்ப்பால் குழந்தைகளின் முதல் உணவு மட்டுமல்ல. முக்கியமான உணவும் கூட. கர்ப்ப காலத்தில் உணவில் எடுத்துக் கொள்ளும் அதே கவனத்தை குழந்தை பிறந்த பின்னரும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் தாய் உண்ணும் உணவே தாய்ப்பாலாக குழந்தைக்கு வந்து சேரும். அதுவே குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

 1.  நீர்ச்சத்துகள் அதிகம் உள்ள காய்கறிகளான முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கும். கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி சாப்பிடலாம். சுறா மீன் போன்ற பால் சுரப்பை அதிகரிக்கும் மீன்களைச் சாப்பிடலாம்.
 2.  பப்பாளிக்காயின் தோலை நீக்கி விட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி லேசாக வேக வைத்துச் சாப்பிடலாம். இதில் முக்கியமாகக் குழந்தைக்குத் தேவையான வைட்டமின் “ஏ” சத்தும் அடங்கியுள்ளது.
 3.  வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அல்லது வெந்தயக்கஞ்சி வைத்து குடிக்க பால் சுரப்பு அதிகரிப்பதோடு, கருப்பையைச் சுருங்கச் செய்து கருப்பையின் அழுக்குகளையும் நீக்கும்.
 4.  உணவில் பூண்டு, வெங்காயம் அதிகம் சேர்த்துக் கொள்வதால் பால் சுரப்பை அதிகமாக்கி உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக் கும். நெய்யில் பூண்டை தோலுடன் நன்கு வதக்கி, பின் தோலை நீக்கி பூண்டுப் பற்களைச் சாப்பிட்டு வர தாய்ப்பால் நன்கு ஊறும்.
 5.  கேழ்வரகில் தயாரித்த உணவுகளைச் சாப்பிட்டாலும் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
 6.  முளை கட்டிய பயறு வகைகள், சிறுதானிய சிற்றுண்டிகள் எடுத்துக் கொள்ளலாம். இது தாய்க்கும் குழந்தைக்கும் சரிவிகித சத்துள்ள உணவாக அமையும்.
 7.  நார்ச்சத்துள்ள கீரை வகைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் கேரட், முருங்கைக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் பால் சுரப்பு சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சனைகளை தடுக்கலாம். இதனால் குழந்தைக்கும் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படாது.
 8.  பேரீச்சம், அத்தி போன்ற இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் எடுத்துக் கொள்வதால் தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலையும் அதிகரிக்கும்.
 9.  குழந்தைக்கு ஒவ்வொருமுறை பால் கொடுக்கும் முன்பும் சுத்தமான நீர் ஆகாரங்களை அதிகமாகக் குடிக்க வேண்டும். இதனால் தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மார்பில் பால் கட்டுதல் போன்ற பிரச்னைகள் வராது.
 10.  தாய்ப்பால் புகட்டும் பெண்கள் அதிகக் காரமான உணவுகளை உட்கொள்ளக்கூடாது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு அதனால் செரிமானப் பிரச்சனை ஏற்படும். அதுபோல பிராய்லர் கோழி மற்றும் துரித உணவுகளைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
 11.  பசும்பால் பொருட்களில் உள்ள பால்புரதம் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். பால், தயிர், பாலாடைக்கட்டி போன்ற உணவுகள் உண்பதை தாய்மார்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவு காபி குடித்தால் அதிலுள்ள கெபைன் எனும் வேதிப் பொருள் தாய்ப்பாலில் கலந்து குழந்தை யின் தூக்கத்தைக் குறைக்கும். தூக்கத்தைக் கெடுக்கும்.
 12.  எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தை களுக்கு மந்தத்தன்மையை ஏற்படுத்துவதோடு, தாயின் உடல் எடையினையும் அதிகரித்து விடும். கார்போனைட்டட் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
 13.  முக்கியமாகத் தாய்ப்பால் கொடுக்கும் பெண் கள் எந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன்னரும், மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது மிக மிக முக்கியம். காரணம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் உணவும் மருந்தும் என்பதை மறந்து விடக் கூடாது.
 14.  தாய்ப்பால் புகட்டும் போது பெண்கள் மனஅமைதியுடன் இருத்தல் வேண்டும். பெண்களுக்கு சில நேரங்களில் தாய்ப்பால் கட்டிக் கொண்டு மிகவும் அவதிப்படுவார்கள். கனத்த மார்பகங்களுடன் இருக்கும் வலியினைப் பல பெண்கள், ரொம்பவே வலிக்குதே என்று துடிப்பார்கள். அழுகையே வந்து விடும் சில சமயங்களில். இதற்கு என்ன கரணம்?
 15.  குழந்தை பிறந்த முதல் மாதத்தில் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். குழந்தைக்கு சிறு வயிறு என்பதால், கொஞ்சம் தான் பால் குடிக்கும். அந்த சமயத்தில் மார்பில் பால் கட்டிக் கொள்ளும். குழந்தைக்குப் பால் புகட்டுவதை நிறுத்தி விட்டாலோ, சரியாகப் பால் தராமல் இருந்தாலோ, தரையில் மார்பகங்களை அழுத்திப் படுத்திருந்தாலோ தாய்மார்களுக்குப் பால் கட்டிக் கொள்ளும்.
 16.  தாய்ப்பால் புகட்டும் பெண்கள் இறுக்கமான உடைகள் அணியக் கூடாது. சுடுநீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுக்கவும். இளஞ்சூடான நீரில் குளித்தாலும் பால் வற்றி விடும். நீங்களே உங்கள் கைகளைக் கொண்டு மசாஜ் செய்தால் (பெரும்பாலோர் இதனையே செய்கின்றனர்) பால் கரைந்து வெளியேறி விடும்.

- Advertisement -

எங்களின் ஸ்ரீ தன்வந்தரி ஆயுர்வேதா மருந்தகம் வழங்கும் ஆயுர்வேதக் கலவையான ஜீவ கல்பம் எனும் பொடியினை காலை மாலை தொடர்ந்து பாலில் குடித்து வர பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிப்பு மற்றும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஆவதால் குழந்தையின் உடல் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.
தொடர்புக்கு : 90037 77757, 80127 77757, 88837 77757

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.