துறையூர் உணவகங்களில் அரசு சத்துணவு முட்டைகள் அமோக விற்பனை…. வைரல் வீடியோ…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

துறையூர் உணவகங்களில் அரசு சத்துணவு முட்டைகள் அமோக விற்பனை..சமூக ஆர்வலர்கள் வேதனை.

வீடியோ லிங்

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

திருச்சி மாவட்டம் துறையூரில், சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் குழந்தைகள் காப்பகம் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள்ஆகியவற்றில் தினசரி மதிய உணவிற்காக தமிழக அரசு சார்பில் லட்சக்கணக்கான முட்டைகள் இலவசமாக பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

வீடியோ லிங்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்நிலையில் துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் வங்கிகளின் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகம் தேநீர் கடையுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்த உணவகத்தில்தமிழக அரசின் முத்திரை இட்ட சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் ரூபாய் இரண்டுக்கு கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களிடம் ரூபாய் 15க்கு மேல் ஆம்லேட் உள்பட பல்வேறு விதமான முட்டை உணவுகள் விற்கப்பட்டு வருகின்றது.

இதனை கடைக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து முட்டை பாமாயில், அரிசி, பருப்பு உள்பட அனைத்து பொருட்களை அந்த தனியார் உணவகத்திற்கு தினந்தோறும் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட உணவகத்தில்தமிழக அரசின் சத்துணவு முட்டைகள்இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் இந்த தகவல் துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் துறையூரில் உள்ள தனியார் உணவகங்களில்நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– ஜோஸ்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.