போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1.11 லட் சம் தொழிலாளர்கள் பணிபுரி கின்றனர். 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், அடுத்த ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், 15வது சம்பள உயர்வு ஒப்பந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் கடந்த மாதம் 27ம் தேதி நடந்தது. போக்குவரத்துத்துறை முதன்மை செயலர் பணீந்திர ரெட்டி தலை மையில் நடந்த பேச்சுவார்த்தையில், அரசு போக்குவரத்து, வருவாய்த்துறை அதிகாரிகள், 8 கோட்டங்களின் மேலாண்மை இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட னர். சிஐடியுசி, ஏஐடியுசி, தொமுச, அண்ணா தொழிற்சங்கம் உள்பட 84 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

14வது சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கங்களின் முதல் கோரிக்கையாக வைத்தனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை, அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எந்த முடிவும் எட்டப்படாமல் அன்றைய கூட்டம் முடிந்தது. அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தைக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதுகுறித்து, ஏஐடியுசி, பொதுச்செயலாளர் ஆறுமுகம் கூறியது: முதல் கட்ட முத்தரப்பு பேச்சில் 84 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. ஒவ்வொரு தொழிற்சங்கத்தில் இருந்தும் தலா ஒருவர்  மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. தொ.மு.ச., அண்ணா தொழிற் சங்க பேரவை, ஏஐடியுசி., ஏஐடியுசி., உள்ளிட்ட பெரிய தொழிற்சங்கங்களுக்கும் ஒரு நிர்வாகி மற்ற சிறு தொழிற்சங்கத்துக்கு ஒரு நிர்வாகி என்ற ரீதியில் பேச்சில் பங்கேற்க அழைப்பதை ஏற்க முடியாது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இது, தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்வதில் பாரபட்சத்தை ஏற்படுத்தும். எனவே, பெரிய தொழிற்சங்கங்களில் இருந்து 2, 3 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சு சுமூகமாக நடக்க வேண்டும். ஆனால், சங்கங்களை முறைப்படுத்துவதை காரணம் காட்டி காலதாமதம் செய்து வருகின்றனர். எனவே, இரண்டாம்  கட்ட பேச்சை விரைவில்  துவங்க வேண்டும். இவ்வாறு அவா் கூறினார்.

போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, முதல் கட்ட பேச்சின்போது, தொழிற்சங்கங்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பேசி வருகிறோம். விரைவில், அடுத்தகட்ட பேச்சு  தேதி அறிவிக்கப்படும் என்றனர்.

அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தை விரைவாக நடைபெற வேண்டும், தீபாவளிக்கு முன் பாகவாவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுமா என்பதே போக்குவரத்து தொழிலாளா்கள் எதிர்பார்ப்பு.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.