தேனி : ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் !
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கம் சார்பாக ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு, அவற்றுக்குப் பதிலாக புதிய வாகனங்கள் வழங்கிட கோரியும்; அனைத்துத் துறைகளிலும் உள்ள ஓட்டுனர் காலி பணியிடங்களை ; கால வரை முறை ஊதியத்துடன் நிரப்பக்கோரியும்; ஓட்டுனர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை கலைந்து புதிய ஊதிய திருத்தம் வழங்கிடவும்; ஓட்டுநர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிடவும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் மருத ராஜன், பொருளாளர் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
– ஜெ.ஜெ.