திருச்சியில் புத்தெழுச்சி பெறுகிறதா, அ.ம.மு.க.?

0

திருச்சியில் புத்தெழுச்சி பெறுகிறதா, அ.ம.மு.க.?

ம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளராக இருந்துவந்த மனோகரன், எடப்பாடியின் ’எழுச்சி’யையடுத்து மீண்டும் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட்டார்.

அமமுக செந்தில்நாதன்
அமமுக செந்தில்நாதன்.

காலியான திருச்சி மாவட்ட செயலர் பொறுப்பிற்கு, திருச்சி மாநகராட்சியின் 47-வது வார்டு கவுன்சிலராக இருந்துவரும் செந்தில்நாதன் என்பவரை நியமித்திருக்கிறார், அ.ம.மு.க.வின் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன்.

”அண்ணன் செந்தில்நாதன் பொறியியலில் பட்டப்படிப்பு முடிச்சிட்டு இங்கிலாந்துல எம்.பி.ஏ. முடிச்சிருக்காரு. அ.ம.மு.க.வின் கவுன்சிலராக இருந்து கொண்டு மாநகராட்சிக்கூட்டங்களில் தனியொருவனாக குரல் எழுப்பி வருகிறார். கட்சியின் இளைஞர் பாசறை செயலாளராகவும் இருக்கும் அவர் துடிப்போடு செயல்படுபவராகவும், கட்சியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பல்வேறு செயல்திட்டங்களையும் தீட்டி வருகிறார். கடந்த சில நாட்களில் மட்டுமே 36 ஊராட்சிப் பகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து ஊக்கமளித்துவருகிறார். விரைவில் கட்சி புதுத்தெம்போடு புத்தெழுச்சி பெறும்…” என குதூகலிக்கிறார்கள், அவரது சகாக்கள்.

– சந்திரமோகன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.