மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நேரடி சேர்க்கையில் சேர 17.10.2024 முதல் 30.10.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் விண்ணபதாரர்கள் இத்தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்க்கை மேற்கொள்ளலாம். சேர்க்கை மேற்கொள்ள கடைசி நாள் : 30.10.2024.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

காலி இடங்கள் உள்ள தொழிற் பிரிவுகள்

 

வ.

எண.

 

தொழிற்பிரிவு கல்வித்தகுதி பயிற்சி காலம் மகளிருக்கு

உச்ச வயது வரம்பு

 

1 கம்மியர் மின்னணுவியல் (NCVT)
(Electronic Mechanic)
10 ம் வகுப்பு தேர்ச்சி 2 ஆண்டுகள் ஏதுமில்லை

 

2 இயந்திர வேலையாள் (Machinist) (NCVT) 10 ம் வகுப்பு தேர்ச்சி 2 ஆண்டுகள் ஏதுமில்லை
3 டெஸ்க் டாப் பப்ளிஸிங் ஆப்பரேட்டர் (NCVT)
(DTPO)
10 ம் வகுப்பு தேர்ச்சி 1 ஆண்டு ஏதுமில்லை
4 கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும்

புரோகிராமிங் அசிஸ்டென்ட் (NCVT)(COPA)

10 ம் வகுப்பு தேர்ச்சி 1 ஆண்டு ஏதுமில்லை
5 சுருக்கெழுத்து (DOTE) 10 ம் வகுப்பு தேர்ச்சி 1 ஆண்டு ஏதுமில்லை
6 பல்லூடகம் அசைவியல் மற்றும் சிறப்பு விளைவுகள்

(Multimedia Animation &
special effects) (NCVT)

10 ம் வகுப்பு தேர்ச்சி 1 ஆண்டு ஏதுமில்லை

 

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அரசு தொழிற்பயிற்சி  நிலையம்
அரசு தொழிற்பயிற்சி நிலையம்

சிறப்பு அம்சங்கள்

1) கம்மியர் மின்னணுவியல் மற்றும் இயந்திர வேலையாள், தொழிற் பிரிவுகளில் ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்கள் (இருபாலர்) பயிற்சி பெறலாம்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

2) பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற்நிறுவனங்களில் Internship training வழங்கப்படும்.

3) பிரபல தொழில் நிறுவனங்களிலிருந்து வளாக நேர்முகத் தேர்வு (Campus Interview) நடைபெற்று வேலையில் அமர்த்தப்படுவர்.

சலுகைகள்

(1)பயிற்சிக் கட்டணம் இல்லை (2) கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750/- (3) கட்டணமில்லா பேருந்து சலுகை (4)

விலையில்லா மிதிவண்டி (5) விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள் (6) விலையில்லா சீருடைகள் – 2

செட் (7) விலையில்லா காலணி – ஒரு செட் (8) பெண் பயிற்சியாளர்களுக்கு கட்டணமில்லா உணவுடன் கூடிய விடுதி வசதி (9) புதுமைபெண் திட்டத்தில் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படும்.மற்றும் தகுதி வாய்ந்த ஆண் பயிற்சியாளர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படும்.

இது தொடர்பாக முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), புள்ளம்பாடி அவர்களை 9443997026 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அறிந்து பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.