மனிதநேய மக்கள் கட்சியின் மகத்தான பணி!!!
திருச்சி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த லால்குடி நகரம் எலந்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி விஜயகுமார் (33) அவர்கள் தொழிலாளியாக சிங்கப்பூரில் வேலை செய்கிறார். 28.01.25 கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் கடலில் குளிக்க செல்லும் போது கடல் அலையில் இழுத்துச் சென்று மரணமடைந்தார்.
திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக தலைவர் M.A. முகமது ராஜா அவர்களிடம் மரணம் அடைந்த உறவினர்கள் உடலைக் கொண்டு வர வேண்டுகோள் வைத்ததால், லால்குடி மமக துணை செயலாளர் ரம்ஜான் அலி அவர்களின் தலைமையில், நாகூர் தம்பி ஷா மற்றும் அய்யம்பேட்டை செல்லப்பா அவர்களின் உதவியுடன் சிங்கப்பூரில் உடலை பெற்றுக் கொண்டு இன்று (4.2.25) மதியம் 3.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் திருச்சி கிழக்கு மாவட்ட மனித மக்கள் கட்சி நிர்வாகிகள் உடலை பெற்றுக் கொண்டு, உறவினருடன் வீடு வரை சென்று தொழிலாளி விஜயகுமார் உடலை ஒப்படைத்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதில் மு.சையது முஸ்தபா, விளையாட்டு செயலாளர் A.இப்ராஹிம், நியு செனையா செளதி ரியாத் தமுமுக து.செயலாளர் S. நஜிமுதீன், சாந்தி நகர் கிளை தலைவர் M.முஹம்மது ஆரிப் ஆகியோர் உடன் இருந்தனர்.
— அங்குசம் செய்திப்பிரிவு.