அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள கிரீன் ராயல் !  வீடுற்ற ஏழைகளுக்கு வழங்க வைகை மகளிர் நலச்சங்கம் கோரிக்கை.

0

அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் விடுதி !  வீடுற்ற ஏழைகளுக்கு வழங்க வைகை மகளிர் நலச்சங்கம் கோரிக்கை.

 

உடந்தையாக செயல்படும் அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செயல்படுவதாக குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் போடி நகராட்சி பகுதி வைகை மகளிர் நலச் சங்கத்தை சேர்ந்த வீடுற்ற ஏழை, எளியவர்கள், விதவைகள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள், உள்ளிட்ட 73  குடும்பத்தினர் கலைஞர் கருணாநிதி நகர் என்று பெயரிட்டு நேற்று அரசு நிலத்தில் குடியேறினர்.

 

https://businesstrichy.com/the-royal-mahal/

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். உடனடியாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் வைகை மகளிர் நலச் சங்கத்தினர் மனுவில், விதவைகள், ஊனமுற்றவர்கள், ஏழை, எளிய மக்கள், உறுப்பினராக இருக்கின்றனர். எங்கள் உறுப்பினர்களுக்கு சொத்துகள், சொந்தமாக குடியிருக்க வீடு கூட இல்லை.

பெரும் பாலும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். எனவே வைகை மகளிர் நல சங்கம் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு மாநில அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு மனு அளித்தோம்.

 

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் மனுவின் அடிப்படையில் போடி பட்டா எண்: 3516, புல எண் 328/1 பட்டா வழங்கிட சிபாரிசு செய்யப்பட்டது. கிராம நிர்வாக அலுவலரும், நில அளவையரும் மேற்படி இடத்தை பார்வையிட்டு வரைபடம் தயார் செய்து எங்களுக்கு பட்டா வழங்க பரிந்துரை செய்தனர். இருப்பினும் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்காமல் புறக்கணித்து வருகின்றனர். எனவே போடி கிராம் புல எண் 328/1 யில் 73 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட கோரி போடி வைகை மகளிர் நலச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

வைகை மகளிர் நல சங்கம்
வைகை மகளிர் நல சங்கம்

 

இது குறித்து வைகை மகளிர் நல சங்க தலைவர்செல்வி பேட்டி

எங்கள் சங்கத்தில் விதவைகள், ஆதரவற்றவர்கள், ஊனமுற்றவர்கள், எங்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர் சங்க உறுப்பினர்கள் பெரும்பாலும் வீட்டு வேலை செய்யும் பெண்களாக உள்ளனர். அவர்கள் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து மட்டுமே வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் வீட்டு மனை வேண்டி விண்ணப்பம் கொடுத்தோம். அதன் பெயரில் போடி தாசில்தார், துணை தாசில்தார், விஏஓ உள்ளிட்டவர்கள் விசாரணை நடத்தி வீட்டுமனை பட்டா வழங்குவதாக தெரிவித்தனர்.

 

மேலும் தொடர்ந்து வீட்டுமனை வேண்டி தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களிடம் மனு அளித்து வந்தோம். பூமிதான நிலத்தில் குடிசை அமைத்து குடியேறினோம். கிரீன் ராயல் உரிமையாளர் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அடியாட்களை வைத்து மிரட்டி வருகின்றனர். இவருக்கு உறுதுணையாக அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும் செயல்பட்டு வருகிறார். எனவே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளோம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.