குருப்-IV க்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வு வகுப்புகள் கலெக்டா் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 3935 காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு குருப்-IV தேர்வுக்கான அறிவிப்பாணை 25.04.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வானது 12.07.2025 அன்று நடைபெற உள்ளது.

இத்தேர்வினை போட்டித்தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் குருப்-IV தேர்வுக்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வு (TEST BATCH) வகுப்புகள் 06.05.2025 முதல் துவங்கப்படவுள்ளது. இம்மாதிரித் தேர்வுகள் பாடவாரியாக 06.05.2025, 12.05.2025, 17.05.2025, 22.05.2025, 27.05.2025, 02.06.2025, 07.06.2025, 12.06.2025, 16.06.2025 மற்றும் 20.06.2025 ஆகிய தேதிகளிலும், முழு மாதிரி தேர்வுகள் 24.06.2025, 26.06.2025, 02.07.2025, 04.07.2025 மற்றும் 09.07.2025 ஆகிய தேதிகளிலும் முற்பகல் 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளன. இம்மாதிரித் தேர்வுகள் டி.என்.பி.எஸ்.சி ஆல் நடத்தப்படும் தேர்வு போன்று 200 வினாக்கள் கொண்டதாகவும் OMR தாளினைக் கொண்டும் நடத்தப்படும்.
மேற்கண்ட மாதிரித் தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் பெயர், கல்வித்தகுதி மற்றும் குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப எண் ஆகியவற்றை 9499055902 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு 05.05.2025 க்குள் செய்தி அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித்தேர்வர்களும் இம்மாதிரித் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு 0431-2413510 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்ற தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.