கல்லூரி மாணவர்களுக்கான கையெழுத்துப்போட்டி
மாவட்ட அளவில் கல்லூரிமாணவர்களுக்கான கையெழுத்துப்போட்டி
மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறைச் சார்பாக மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கிடையான தமிழ் கையெழுத்துப் போட்டி நடைபெற்றது.
ஒன்பது கல்லூரிகளைச் சேர்ந்த 18 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அ.வளர்மதி, கெளரவ விரிவுரையாளர்களான முனைவர் கௌரி, முனைவர் சுந்தரபாண்டியன் நடுவர்களாக இருந்தனர் சிறந்த கையெழுத்துக்கான முதற் பரிசினைரூ 7000/- மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிஅஜிதாவும், இரண்டாம் பரிசினை ரூ5000/- தியாகராசர் கல்வியியல் கல்லூரி மாணவர் கார்த்திக் மூன்றாம் பரிசினை ரூ3000/- எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரி மாணவி காளீஸ்வரியும் பெற்றனர் மீனாட்சி கல்லூரி, முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முத்துராணி போட்டியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.
போட்டிக்கான பிற ஏற்பாடுகளை முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள் செய்தனர்.
-மதுரை ஷாகுல்
படங்கள் – ஆனந்த்