அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இவர் திருந்தமாட்டார் மாமா……

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விஜய் நடிகராக இருந்தபோது மனைவி அல்லாத ஒரு நடிகையோடு வலம் வந்ததை, சினிமாத்துறையில் இது சாதாரணம் என கடந்து போகமுடிந்தது. கட்சி தொடங்கி பொதுவாழ்வுக்கு வந்து பலலட்சம் பேருக்கு தலைவரானபோது ஏற்றுக்கொள்ளாமல் அவரின் திருமணம் கடந்த உறவை அதாவது கள்ளக்காதலை விமர்சித்தது. இப்போது கடுமையாக எதிர்ப்பதன் நோக்கம், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 8.5 கோடி மக்களின் பிரதிநிதி எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்கிற பொறுப்பு இருக்கிறது. முதலமைச்சரே இப்படி நடந்துக்கொள்வது அந்த மாநிலத்துக்கான அவமானம்.

முற்போக்கு, வித்தியாசமாக நொட்டும் மாநிலம் எனச்சொல்லும் தமிழ்நாட்டைப்பார்த்து, மக்களுக்காக போராடாத சினிமா ஹீரோவை முதலமைச்சராக்கி வச்சியிருக்கிங்க எனக்கேட்டு இந்தியா முழுவதுமே கிண்டலாக சிரிக்கிறார்கள். வெளிமாநிலங்களில் பயிலும், பணியாற்றும் 2கே, ஜென் – ஸி தலைமுறையிடம் கேளுங்கள் எவ்வளவு விமர்சனத்து ஆளாகிறார்கள் என்பது தெரியும். இப்போது நம்மை கேவலமாக பார்க்க தொடங்கியுள்ளார்கள்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

விஜய் ரசிகர்களை தவிர மற்றவர்களால் ஏற்கமுடியாதது, நடிகை த்ரிஷாவுடன் முதலமைச்சர் விஜய் வலம்வருவது. மீண்டும் சொல்கிறேன் அவர் நடிகராக இருந்துக்கொண்டு இப்படிச்செய்தால் சமுதாய அக்கறை இல்லாதவர் என கடந்து போகலாம். அவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். ஒரு தவறை திரும்ப, திரும்ப தெரிந்தே செய்வதன் மூலம், அவரை பின்தொடரும் பலலட்சம் இளைஞர் – இளைஞிகள், குழந்தைகளுக்கு, இச்சமூகத்துக்கு என்னச்சொல்ல வருகிறார்?

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இது தப்பில்லை என்கிறார். அது எவ்வளவு பெரிய சமுதாய சீரழிவு. கலாச்சாரம், பண்பாடு குறித்து பேசும் எந்த அரசியல் கட்சி தலைவரும் இதனை கண்டிக்கவில்லை. ரசிகர்களைப்போல இது அவரின் தனிப்பட்ட வாழ்வு எனச்சொல்லி கடக்க முடியாது. தவறு செய்வது இம்மாநிலத்தின் முதலமைச்சர்.

யாவரும் கேளீர்

மாநிலத்தின் பாதுகாப்பு, அரசு முடிவுகள், கொள்கை முடிவுகள் தொடர்பாக முதல்வருக்கு தினம் தினம் ரகசிய தகவல்கள் வரும். அதனை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளமாட்டேன் என உறுதிமொழி எடுத்தவர் முதலமைச்சர். பாதுகாப்பு நிறைந்த முதலமைச்சருக்கான அரசு காரில் ஏறி ஒரு நடிகை பந்தாவாக வலம் வருகிறார். முதலமைச்சர் போகும் இடங்களில் எல்லாம் பின்னால் செல்கிறார். இது எதன் அடிப்படையில்? இந்த கேள்வியை சமானியன் யார் வேண்டுமானாலும் கேட்கலாம். இந்த விதத்திலாவது கேள்வி எழுப்பலாமே? இப்படி முதலமைச்சராக இருந்த எடப்பாடியோ, ஸ்டாலினோ செய்திருந்தால் இச்சமூகம் அமைதியாக இருந்திருக்குமா? விஜய்யை விமர்சிக்காதபடி உங்களை யார் தடுத்தது?

இது அவருடைய பர்சனல் என முட்டுக்கொடுப்பவர்களின் மனம் முழுவதும் அழுக்கே உள்ளது.

—  ராஜா ராஜ்பிரியன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.