முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவுக்கு மக்கள் நாயகன் விருது வழங்கிய நடிகர் பாண்டியராஜன்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ ராஜு, நடிகர் பாண்டியராஜன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவது கிராம வாழ்க்கையா? நகர வாழ்க்கையா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு முனைவர் நெல்லை பி சுப்பையா நடுவராக செயல்பட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மக்கள் நாயகன் விருது முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ ராஜு க்கும், மருத்துவமாமணி விருது மருத்துவர் பத்மாவதி, சேவா ரத்னா விருது விநாயகா ஜி.ரமேஷ், சிறந்த பள்ளி விருது வேல்ஸ் வித்யாலயா பள்ளி முதல்வர் பொற்கமலன், தொழில் சிகரம் விருது வி. சண்முகத்திற்கும்,
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மருத்துவத் திலகம் விருது மருத்துவர் பாலமுருகன், இராஜ ராஜ சோழன் விருது புதுதில்லி கலை இலக்கிய பேரவை பொதுச் செயலர் பா குமார், தமிழ் சுடர் விருதுகள் மாணவிகள் நிவேதிதா, ஹரி தர்ஷினி, ஹர்ஷிகா, மாணவர்கள் கவின் ராஜா, தர்ஷன், தீரன் ஆகியோருக்கு நடிகர் பாண்டியராஜன் வழங்கினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பேசுகையில் தான் அமைச்சராக இருந்தபோது கலைமாமணி விருது தொடர்பாக யாருக்கு வழங்கலாம் என்ற பட்டியலை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் காண்பித்தபோது, அதில் இருந்த பெயர்களில் திரைத்துறை சார்பில் பாண்டியராஜனுக்கு வழங்கலாம் என்று பரிந்துரைத்தார் என்றார்.
— மணிபாரதி.