தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு வழங்கிய உயரிய அங்கீகாரம்
பதவிகள் பலமுறை வரும், போகும். ஆனால் அந்தப் பதவியில் இருப்பவர் காட்டும் பண்பே வரலாற்றில் நிலைக்கும்.
அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு, பொதுவாழ்வின் தவப்புதல்வர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு, நம் மாண்புமிகு முதலமைச்சர் உயர்திரு M. K. Stalin அவர்கள் ‘வீரவணக்கம்’ செலுத்தியது வெறும் சடங்கல்ல; அது ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு வழங்கிய உயரிய அங்கீகாரம்.
அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர், எளிமையின் அடையாளத்திற்கு மதிப்பளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம். மாண்புமிகு முதலமைச்சர் ( Chief Minister of Tamil Nadu ) அவர்களின் இந்த மாண்பு, வருங்காலத் தலைவர்களுக்கு ஒரு உன்னதமான பாடம்!
நம் முதலமைச்சரின் இந்தச் செயல் தமிழகத்தின் அரசியல் நாகரிகத்திற்கு போற்றுதலுக்குரிய ஒரு சிறந்த இலக்கணம்!
நெல்லை முபாரக்
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு
Comments are closed, but trackbacks and pingbacks are open.