உன்னால் முடியும் புகழ் – எம்.எஸ். உதயமூர்த்தி பிறந்தநாள் விழா !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

 திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் 98-ஆவது பிறந்தநாள் விழா பொன்மலை பகுதியில் 08.04.26 அன்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில், மக்கள் சக்தி  இயக்கத்தின் கொள்கைகளான சுயவளர்ச்சி, சுய பொருளாதாரம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றை முன்னிறுத்தி பல்வேறு பயனுள்ள பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

எம்.எஸ். உதயமூர்த்தி பிறந்தநாள் விழா !
எம்.எஸ். உதயமூர்த்தி பிறந்தநாள் விழா !

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சுயவளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புத்தகங்கள், சுய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் மரக்கன்றுகள் மற்றும் சமூக சேவையை மேம்படுத்த துணிப்பைகள் வழங்கப்பட்டன.

புத்தகங்கள் மனிதன் அறிவை வளர்த்து சுய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதையும், மரக்கன்றுகள் தானும் வளர்ந்து சுற்றுச்சூழலுக்கும் மற்றவர்களுக்கும் பயன் தரும் என்பதையும், துணிப்பைகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து பசுமையான சமூகத்தை உருவாக்க உதவும் என்பதையும் இந்நிகழ்வு எடுத்துரைத்தது.

மக்கள் சக்தி இயக்கம்
மக்கள் சக்தி இயக்கம்

இந்நிகழ்ச்சி மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், நிர்வாகிகள் தாமோதரன், செந்தில்நாதன், இளங்கோ, செல்வராணி, திவ்யா, சகாயகுமார், சுந்தர், குமரன், சந்திரசேகர் மற்றும் 30 மேற்பட்டவர்கள் மூலம் சமூக நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தனிநபர் முன்னேற்றம் ஆகியவை ஒருங்கிணைந்த முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதைக் மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தினார்கள்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.