தமிழ் மொழியை கண்டு திணறும் இந்தி மொழி ! – ராம் தங்கம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது பெறுவதற்காக கல்கத்தாவிற்கு அழைக்கப்படுவதற்கு முன்பு எங்களுடைய ஏற்புரையை இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதி அனுப்ப சொல்லி இருந்தார்கள். நான் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பி இருந்தேன். விருதுப் பெற்ற பிறகு  இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளான 24 மொழிகளை சேர்ந்த எழுத்தாளர்களும் ஏற்புரை வழங்கினோம். அதில்  மராத்தி மலையாளம் பெங்காலி பஞ்சாபி சிந்தி  கொங்கணி என பெரும்பாலானவர்கள் இந்தியில் பேசினார்கள். சிலர் ஆங்கிலத்தில் பேச, நான் தமிழிலேயே பேசினேன்.

விழாவிற்கு முன்பு ஒரு நண்பர் சொன்னார். நீங்கள் ஆங்கிலத்தில் எழுதி கொடுத்திருக்கிறீர்கள் அல்லவா அதனால் ஆங்கிலத்தில் கூட பேசலாம் என்றார். நான் ‘இல்லை என்னுடைய தாய் மொழியான தமிழில் எழுதியதற்காக தான் விருது கிடைத்துள்ளது.  அதனால் நான் தமிழில் பேசினால்தான் சரியாக இருக்கும். எல்லோருக்கும் புரிகிறதோ இல்லையோ நான் தமிழில் தான் பேசுவேன் என்று சொன்னேன்.  நான் என்ன பேசுகிறேன் என்பதை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்திருக்கிறேனே அதை அவர்கள் படிக்கும் போது புரிந்து கொள்வார்கள்.

இனிய ரமலான் வாழ்த்துகள்

இந்த மேடை என் தமிழ் மொழியை பிரதிநிதித்துவ படுத்துவதற்கான மேடை. என்னுடைய புத்தகத்துக்கான விருது என்பதை விட தமிழ் பிரிவில் தான் விருது பெற்றிருக்கிறேன். அப்படி இருக்கும்போது என்னுடைய ஏற்புரையில் என்னுடைய மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக நான் தமிழில் பேசினால் தான் சரியாக இருக்கும் என்றேன்.

ராம் தங்கம்
ராம் தங்கம்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

” நான் ராம் தங்கம் தமிழ் எழுத்தாளன். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன வள்ளுவனின் நிலத்திலிருந்து வந்திருக்கிறேன். உலகின் மூத்த மொழியாம் தொல்தமிழ் மொழியின் வேரிலிருந்து வந்திருக்கிறேன்” என தமிழிலேயே பேசினேன். யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

அந்த விழா முடிந்ததும்  பெங்காலி ஒருவர் வந்து என்னிடம் எல்லோரும் தாய்மொழியில் பேசாதபோது நீங்கள் தாய்மொழியில் பேசியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இலக்கிய வளமும் செழுமையும் பெரும் பாரம்பரியமும் கொண்ட பெங்காலி மொழியை மெல்ல மெல்ல இந்தி விழுங்கி வருவதை சொல்லி வருந்தினார். நம்முடைய தனித்துவமே நம்முடைய மொழி தான் அதை எப்போதும் விட்டு விடாதீர்கள் என்றார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எத்தனையோ மொழிகளை தின்னு செரித்து ஏப்பம் விட்ட இந்தி மொழி இன்னும் தமிழைக் கண்டு திணறுகிறது என்றால் அதற்குக் காரணம் நம்முடைய உறுதி தான். அதில் மேலும் மேலும் உறுதியாக இருப்போம். எம்மொழிக்கும் எதிரி அல்ல. விரும்புவர்கள் கற்றுக் கொள்ளட்டும். நம்மைப் பொறுத்தவரை தமிழ் வாழ்க ❤️ தமிழ் வெல்க❤️

 

— ராம் தங்கம். 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.