அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இந்த படம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படம் ஏன் தெரியுமா ?

திருச்சியில் அடகு நகையை விற்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை ஒன்றிய அரசு முடக்கிய போதிலிருந்தே அரசு ஊழியர்கள் கொந்தளித்து வந்தனர். எங்கேயோ பிற மாரியாத்தா என் மேல வந்து ஏறு ஆத்தா என்பது போல ஒன்றிய அரசு வச்ச ஆப்புக்கு மாநில அரசை குடைந்து கொண்டிருந்தார்கள்.மிக ஒரு சில மாநிலங்களில் மட்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அந்தந்த மாநில அரசுகளே தன் தலையில் அந்த பாரத்தை சுமந்து கொண்டு கொடுத்து வருகின்றன. அதே போல தமிழ்நாடு அரசும் ஏன் கொடுக்கக்கூடாது என அரசு ஊழியர்கள் கேட்டு வந்தனர்.

மேலோட்டமாக பார்ப்பின் அதில் ஞாயம் இருப்பது போல தோன்றினாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடரும் மாநிலங்களில் அரசு பணியில் இல்லாத மற்ற பொது மக்களுக்கான திட்டங்கள் நம் தமிழ்நாடு அளவுக்கு இல்லை இல்லை இல்லவேயில்லை.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மகளிருக்கு கட்டணமில்லா போக்குவரத்து, மாதம் 1000₹ உரிமைத்தொகை, முதியோர் ஓய்வுத்தொகை, நலிவுற்ற கலைஞர்களுக்கு ஓய்வூதியம், வாரியங்கள்…அது தொடர்பான ஓய்வூதியங்கள், இலவச கல்வி, இலவச மருத்துவம், மாணவ, மாணவிகளுக்கான மாதம் 1000₹ ஊக்கத்தொகை, ரேஷனில் மாதம் 20 கிலோ விலையில்லா அரிசி, பொங்கல், தீபாவளிக்கு வேட்டி,சேலை, பரிசுத்தொகை, இயற்கை பேரிடர் காலத்தில் நிதி உதவிகள், மாணவர்களுக்கு பேருந்து பாஸ், மாணவர்களுக்கு மதிய மற்றும் காலை உணவு, கல்விக்கான புத்தகங்கள், பை,உபகரணங்கள், உயர்கல்வியில் முதல் தலைமுறையினருக்கு இலவச கல்வி இது போல இன்னும் இன்னும் பல திட்டங்கள் அந்த மாநிலங்களில் கிடையாது. அதனால் அங்கே நிதிச்சுமை என்பது இல்லை.

தவிர தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வைக்கூட ஒன்றிய அரசு கொடுப்பதில்லை. பேரிடர் நிதி அளிப்பதில்லை. மொழிவளர்ச்சி பணம் தருவதில்லை. மோடியின் பெயரால் வீடு கட்டும் திட்டத்துக்கு கூட நம் மாநில அரசேதான் பணம் கொடுக்க வேண்டும். இப்போது 100 நாள் வேலைத்திட்டத்துக்கு கூட மாநில அரசே தான் 60% நிதியை கொடுக்க வேண்டும். கல்விக்கான தொகையை ஒன்றிய அரசு நமக்கு கொடுப்பதில்லை. இப்படி எல்லா வகையிலும் நாம் பழிவாங்கப்படுகின்றோம். இருப்பினும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை எப்படி கொடுக்கலாம் என தமிழ்நாடு அரசு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ககந்தீப் சிங் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்தது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மாண்புமிகு தங்கம் தென்னரசு….

தான் 2006-2011 காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட போது சமச்சீர்கல்வி, 2000 க்கும் மேற்ப்பட்ட நூலகங்கள், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என முத்திரை பதித்தவர். அதே போல 2021 ம் ஆண்டில் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட போது ட்ரில்லியன் டாலர் முதலீடு என்னும் இலக்கை வைத்துக்கொண்டு ஓடினார். ஜிடிபியை உயர்த்த போராடி வென்றார். தன் முத்திரையை மீண்டும் அந்தத்துறையில் பதித்துக்கொண்டிருந்த போது தான் தமிழ்நாட்டின் நிதியமைச்சராக மாற்றப்பட்டார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

அப்போது அவருக்கு முன்பாக இருந்த முக்கியமான சவால் மகளிருக்கு மாதம் 1000₹ உரிமைத்தொகை. முதலமைச்சரின் கனவுத்திட்டம் அது. நிதிச்சுமை கடுமையாக இருந்த போது இது சாத்தியமில்லாத திட்டம் என எல்லோரும் நினைத்த போது அதை வெற்றிகரமாக நிறைவேற்றி முதலமைச்சரின் பாராட்டுதல்களை பெற்றார். இது இந்திய அளவிலான சாதனை. அதே போல மாணவர்களுக்கான காலை உணவுத்தொட்டம், தூய்மைப்பணியாளர்களுக்கு காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் என நிதி சம்பந்தமான திட்டங்களை முதலமைச்சரின் அத்தனை கனவுத்திட்டங்களையும் நிறைவேற்றிக்காட்டினார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

என்ன செய்தாலும் அவர் மனதில் பழைய ஓய்வூதியத்திட்டம் செயல்படுத்துவது குறித்தான முள் நெருடிக்கொண்டே இருந்ததை நான் அறிவேன். அப்போது தான் உயர்திரு ககந்தீப் சிங் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து அதில் தீவிரம் காட்டினார். ஒவ்வொறு நாளும் அவரை தொடர்பு கொண்டு இது குறித்து நம் நிதியமைச்சர் ஆலோசித்துக்கொண்டே இருந்தார். பல திருத்தங்கள் சொன்னார். கடைசியாக ஒரு வரைவு அறிக்கையை 15 நாட்கள் முன்பாக ககந்தீப் சிங் சார் தயாரித்து முடிந்ததும் நம் நிதித்துறை செயலாளர் உயர்திரு உதயசந்திரன் சார் அவர்களோடு அதில் சில மாற்றங்கள், திருத்தங்கள் செய்து அதை தலைமைச்செயலாளர் உயர்திரு முருகானந்தம் சாரிடம் விவாதித்து பின்னர் மீண்டும் ககந்தீப் சிங் சாரை அழைத்து ஆலோசனை மேற்க்கொண்டார். ஒரு வழியாக நான்கு நாட்கள் முன்பாக அந்த ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்கள் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் சில பொருளாதார மேதைகளை அழைத்து மேலும் அந்த ஓய்வூதியதாரர்களுக்கு சாதகமான சில விஷயங்களை சேர்த்து நிதியமைச்சர் தங்கம் சாருக்கு அனுப்ப மீண்டும் இவருக்கு தூக்கமில்லா இரவுகள். இன்னும் சொல்லப்போகின் கடந்த 5 நாட்கள் மாண்புமிகு தங்கம் சாரும், நிதித்துறை செயலாளர் திரு உதயசந்திரன் சாரும் தூங்கவேயில்லை என்பதை நான் உறுதியாய் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அப்போது தான் மீண்டும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சொன்ன பின்னர் அமைச்சர்கள் தங்கம் சாரும், எ.வெ.வேலு அண்ணன் அவர்களும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆஃப் தி ரிக்கார்டாக அமைச்சர் எதிர்வரும் 03.01.2026 அன்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் இணைய செயலி ஆரம்பிக்கும் முன்னர் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு இணையான ஒரு திட்டத்தை முதலமைச்சர் அறிவிக்க வாய்ப்புள்ளது. ஏனனில் அந்த தேர்தல் அறிக்கை செயலியில் இதே கோரிக்கையை பலரும் அதிலே வைத்து வைத்து அந்த செயலியில் ட்ராபிக் ஜாம் ஆகிவிட வாய்ப்பு இருப்பதால் அதற்கு முன்பாக முதலமைச்சர் உங்களுக்கான நல்ல செய்தியை அறிவிப்பார் என சொல்லப்போக அதையே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வெளியே வந்து பகிரங்கப்படுத்தியுள்ளனர். போகட்டும். அவர்களுக்கு நல்லது நடப்பின் சரி.

இன்றைக்கு முதலமைச்சர் அறிவிக்கும் அந்த பழைய ஓய்வூதியத்திட்டத்துக்கு இணையான திட்டம் அரசு ஊழியர்களை திருப்திப்படுத்தும் என நம்புகின்றேன்.

ஆக திமுக 2021 ல் கொடுத்த தேர்தல் அறிக்கையை இந்த 5 ஆண்டுகாலத்தில் 99% நிறைவேற்றிவிட்டது என்பதில் ஓட்டு கேட்க களத்தில் இறங்க தயார்நிலையில் இருக்கும் என் போன்ற திமுக தொண்டர்களுக்கு பெருமகிழ்வு! இனி நெஞ்சு நிமிர்த்தி ஓட்டு கேட்போம் உரிமையுடன்!

வாழ்த்துகள் அரசு ஊழியர்களுக்கு!

நம் முதலமைச்சருக்கும், நம் நிதியமைச்சர் தங்கம் சாருக்கும், நிதித்துறை செயலாளர் திரு உதயசந்திரன் சாருக்கும், ஓய்வூதிய திட்ட அறிக்கை குழு தலைவர் திரு ககந்தீப் சிங் சார் மற்றும் குழுவினர்களுக்கும் நன்றி நன்றி நன்றி!

 

—   அபி அப்பா என்கிற தொல்காப்பியன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.