“நேர்மையே அறம்” –‘திரு.மாணிக்கம்’ சொல்லும் சேதி!
நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்பதைச் சொல்லும் ‘திரு.மாணிக்கம்’ படம் வரும் டிசம்பர் 27-ல் ரிலீஸ் ஆகிறது.
இதனால் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.
இதில் பேசியோர்…..
நடிகர் சாம்ஸ்
“இப்படத்திற்குப் பிறகு என் நண்பர் இயக்குநர் நந்தா பெரியசாமி மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லிஸ்டில் இடம் பிடிப்பார். மிக அழகான சூட்சுமத்தைப் பிடித்துவிட்டார். அவர் தொட்டதெல்லாம் ஹிட்டுதான்”.
நடிகை வடிவுக்கரசி
“மிக மிக எதார்த்தமான கதை, எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளார்கள். நந்தா பெரியசாமி படத்தை அற்புதமாக எடுத்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். நேர்மையான நேர்மையோடு பார்த்துப் பாராட்டுங்கள்”.
ஒளிப்பதிவாளர் சுகுமார்
“இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. இயக்குநர் நந்தா பெரிய சாமி படத்தை அற்புதமாக இயக்கியுள்ளார்”.
இயக்குநர் விக்ரமன் “தமிழில் இந்த வருடம் மிகச்சிறந்த படங்கள் வந்துள்ளது. வாழை, லப்பர்பந்து படங்களை விட இந்த ‘திரு. மாணிக்கம்’ படம் மிகச்சிறந்த படமாக இருக்கும். இந்தப்படத்தை நாம் கௌரவப்படுத்த வேண்டும். இயக்குநராக நந்தா பெரியசாமியை ஜெயிக்க வைக்க வேண்டும்”.
தயாரிப்பாளர் ராஜா செந்தில்
“இந்தப்படத்தின் கதைக்கு முன் 20 கதைகள் கேட்டிருப்பேன். நந்தா பெரியசாமி சாரிடம் சொன்ன இந்தக் கதையைக் கேட்டதும் அழுது விட்டேன். உடனே ரவி சாரிடம் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. உடனே ஒரே நாளில் படத்தை செட் செய்து விட்டோம். நேர்மையாக எல்லோரும் வாழ வேண்டும் எனும் விசயம் இப்படத்தில் உள்ளது. இப்படம் பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.
பாடலாசிரியர் சினேகன்
“இது மனதுக்கு மிக நெருக்கமான படம். நந்தா பெரியசாமி இந்தக்கதையை உருவாக்க எடுத்துக்கொண்ட கடின உழைப்பு பிரமிப்பானது. நேர்மை என்பது தானே அறம், நேர்மையாகத்தானே வாழ வேண்டும் ஆனால் அதைப் படமாக எடுத்துச் சொல்ல வேண்டிய, இடத்தில், நேர்மையாக இருப்பதையே கொண்டாட வேண்டும் என்கிற நிலையில் நாம் இருப்பது சோகம். நல்லவனுக்கு வாழ்க்கையே இல்லை எனும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தான் நேர்மையாக வாழ வேண்டிய அவசியத்தை, மனிதத்தைச் சொல்ல வருகிறது இந்தப்படைப்பு. இதை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்”.
நடிகர் ரவிமரியா
“படம் பார்க்கும் எல்லோரையும் அழ வைக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டான் நந்தா பெரியசாமி. அவன் எழுத்து அத்தனை அற்புதமானது. நேர்மை தான் வெற்றியின் ரகசியம். இப்படத்திற்காக நேர்மையாக உழைத்த அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். இப்படத்தைப் பற்றி தூக்கத்தில் எழுதினால் கூட உங்களால் நேர்மைக்கு மாறாக எழுதிவிட முடியாது”.
இயக்குநர் சரண்
“இந்தப்படம் பார்த்து சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம். ஸ்கெட்ச் போட்டு வேலை செய்திருக்கிறார் நந்தா பெரியசாமி.முழு திருப்தி தந்த படம். கண்டிப்பாக இப்படம் மக்களின் மனங்களை வெல்லும்”.
நடிகை அனன்யா
“இந்தப்படம் என் மனதுக்கு மிக நெருக்கமான படைப்பு. நந்தா சார் இந்தக்கதையைச் சொன்னபோதே பிடித்திருந்தது. அவர் எனக்கு மட்டுமல்லாமல், நடித்த ஒவ்வொருவருக்கும் சின்னச் சின்ன விசயங்களைக்கூட சொல்லித் தந்தார். அது எனக்கு நடிக்க மிக உதவியாக இருந்தது”.
இயக்குநர் நந்தா பெரியசாமி
“இந்தப்படம் ஊர் கூடி இழுத்த தேர். இங்கு உள்ள எல்லோரும் இப்படத்திற்காக உழைத்துள்ளார்கள். தயாரிப்பாளர் ரவிக்குமார் சார் இந்தக்கதையை கேட்டவுடன் ஆரம்பித்தார். சமுத்திரகனி அண்ணன் கதை கேட்டு உடனே ஷூட்டிங் போகலாம் என என்னை நம்பி வந்தார். அவரால் தான் இந்தப்படம் உருவாகியது.
பாராதிராஜா ஐயாவை நான் இயக்கியது எனக்குப் பெருமை. சொன்ன கதையைப் படம்பிடித்துத் தந்த கேமரா மேன் சுகுமாருக்கும் இசையால் உயிர் கொடுத்த விஷால் சந்திரசேகருக்கும் பாடலாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. ரவிக்குமார் சார், ராஜா செந்தில் இப்படத்தைத் தைரியமாக எடுத்ததற்கு நன்றி. ஒரு நல்ல தமிழ்ப்படத்தை எடுத்திருக்கிறார் ரவிக்குமார் சார். அவரை தமிழ் மக்கள் பத்திரமாக கரை சேர்க்க வேண்டும்”.
சமுத்திரகனி
“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிக இனிமையானவர், எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். நல்ல கதையைப் படமாக்குகிறோம் என்பது மட்டும்தான் அவர் மனதிலிருந்தது. இயல்பாக இருப்பது தான் நேர்மை, உண்மை தான் நேர்மை, நேர்மை என்பது தான் இயல்பு. இப்படத்தைப் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி. இப்படம் கண்டிப்பாக வெல்ல வேண்டும். திரு.மாணிக்கம் களத்தில் நிற்கும் வெகுஜனத்தை கவரும். இப்படத்தை வெல்ல வைக்க வேண்டியது உங்கள் கடமை”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இயக்குநர் அமீர்
” ஒரு நல்ல படைப்பு, தரமான படைப்பு. நந்தா தனக்கான இடத்தை அடைந்து விட்டார். மனித சமூகத்திற்கான படைப்பு. இந்த கதாப்பாத்திரத்தை சமுத்திரகனி யைவிட சிறப்பாக யாருமே செய்துவிட முடியாது. தேர்ந்த நடிகனாக மாறிவிட்டார்”.
ZEE தொலைக்காட்சி நிறுவனம் ‘திரு.மாணிக்கம்’ படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது.
இசை விஷால் சந்திரசேகர்,
பாடல்கள் சினேகன், ராஜு முருகன், இளங்கோ கிருஷ்ணன், சொற்கோ. ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
— மதுரை மாறன்.