அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சேலம் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கோர விபத்து… சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சேலம் அருகே கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரி எதிரில், கிருஷ்ணகிரியில் இருந்து கேரளா நோக்கி சென்ற காரும் டிப்பர் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றம்பாளையம் பகுதியை சேர்ந்த கிரிஸ்டோபர், பெரியநாயகம் , ஓசூர் பகுதியை சேர்ந்த பிரதீப் மற்றும் இரண்டு நண்பர்கள் என ஐந்து பேர் கேரளாவுக்கு சுற்றுலா செல்வதற்காக, கிருஷ்ணகிரியில் இருந்து காரில் சென்றனர். அவர்களது கார் சேலம் மாவட்டம் கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரி அருகே , சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அப்போது காரின் முன் சென்ற டிப்பர் லாரியை முந்த முயன்ற போது டிப்பர் லாரி கார் மீது மோதி கார் நசுங்கி விபத்துக்குள்ளானது . இதில் கிறிஸ்டோபர் மற்றும் பெரியநாயகம் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அதில் கிறிஸ்டோபருக்கு உடல் நசுங்கி உள் உறுப்புக்கள் வெளியேறிய நிலையில், இரத்தம் கொட்ட கொட்ட மீட்கப்பட்டார்.

மேலும் காரில் பயணித்த மூன்று நபர்கள் சிறு காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கருப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களுடன் கேரளா சுற்றுலா செல்ல வந்தவர்கள் விபத்துக்குள்ளாகி இருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

-சோழன் தேவ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.