அங்குசம் பார்வையில் ‘விரூபாக்‌ஷா’

0

தயாரிப்பு: ’ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா’ பி.வி.எஸ்.என்.பிரசாத், தமிழக ரிலீஸ்: ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா, திரைக்கதை: சுகுமார், டைரக்‌ஷன்: கார்த்திக்வர்மா தண்டு, நடிகர்—நடிகைகள்:சாய் தரம் தேஜ், சம்யுக்தாமேனன், சுனில், ராஜீவ் கனகலா, பிரம்மாஜி, ரவிகிருஷ்ணா, சாய் சந்த்.  வசனம்: என்.பிரபாகர், இசை: அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு: ஷாம்தத் சைனுதீன், எடிட்டிங்: நவீன் நூலி. பி.ஆர்.ஓ.யுவராஜ்.

எல்லா சினிமாக்களிலும் டைட்டில் போடுவதற்கு முன்பே ‘குடி குடியைக் கெடுக்கும், புகைபிடித்தால் உயிருக்குக் கேடு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்’ என்பதை எழுத்திலும் வாய்ஸ் ஓவரிலும் போட்டே ஆக வேண்டும் என்பது சென்சார் விதி. அதே போல் ஜோசியம், மாந்திரீகம், இவற்றைச் சொல்லும் படங்கள் என்றால், ”மூட நம்பிக்கையை ஆதரிப்பது எங்கள் நோக்கம் அல்ல”என்பதை கண்டிப்பாக போட வேண்டும் என்பதும் சென்சார் விதி.

https://businesstrichy.com/the-royal-mahal/

‘விரூபாக்‌ஷா’ என்றால் தீய சக்திகள் மட்டும் தெரியும் கண்களை உடைய கடவுள் மக்களைக் காப்பார் என்பது அர்த்தமாம். கடந்த மாதம் ஆந்திராவில் ரிலீசாகி வசூலில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் தெலுங்குப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டிருக்கிறார் ஞானவேல்ராஜா.

1979-ல் கதை ஆரம்பிக்கிறது. பக்கா கிராமம். ஒதுக்குப்புறமாக ராத்திரி நேரம் ஒரு வீட்டில் மாந்தீரிக சக்கரம் வரையப்பட்டு, அதில் ஒரு குழந்தை படுத்திருக்கிறது. ஐயர் கெட்டப்பில் இருக்கும் ஒருவர் மந்திரத்தை மூர்க்கமாக ஓதுகிறார். எதிரில் ஒரு பெண் கை—கால்கள் கட்டப்பட்டிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டு கையில் தீப்பந்தத்துடன் ஆவேசமாக திரண்டு வரும் ஊர்ஜனங்கள், அந்தக் குழந்தையை நரபலி கொடுக்கப் போவதாக எண்ணி, ஐயரையும் அந்தப் பெண்ணையும் கட்டி இழுத்து வந்து ஒரு மரத்தில் சேர்த்துக் கட்டி தீ வைத்துக் கொளுத்திவிடுகிறார்கள்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

கட் பண்ணா..1991. 15 வருடங்கள் கழித்து தனது சொந்த ஊரான அந்த கிராமத்தில் இருக்கும் சொத்துக்களை விற்கவும் ஊர்த்திருவிழாவிற்கும் தனது தாய் மற்றும் நண்பனுடன் வருகிறார் ஹீரோ சாய் தரம் தேஜ். வரும் வழியிலேயே ஒரு திகில் சம்பவம் நடக்கிறது. அதற்கடுத்து, ஊரில் திருவிழா ஆரம்பிக்கும் நேரம்  பெருசு ஒருவர் அம்மன் சிலை முன்பாகவே மண்டையப் போடுகிறார். அதன் பின் வரிசையாக சில மரணங்கள். மக்கள் பீதியாகிறார்கள். ஊருக்குள் தீயசக்தி நுழைந்துவிட்டதால், எட்டு நாட்கள் ஊரை அடைத்துவிட்டு, பரிகார பூஜை செய்ய வேண்டும் என்கிறார் கோவில் பூசாரி.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தீய சக்திகளின் கோரத்தாண்டவத்திலிருந்து அந்த கிராம மக்களைக் காப்பாற்ற ‘விரூபாக்‌ஷா’வாகிறார் ஹீரோ சாய் தரம் தேஜ். தெலுங்கு சினிமாவின் பிரபல ஹீரோ பிரபாஸை நினைவூட்டுகிறார் இந்த புதுமுக ஹீரோ சாய் தரம் தேஜ். நடிப்பில் பாஸ் மார்க்கும் வாங்குறார். படத்தில் சூப்பர் ஸ்கோர் செய்திருப்பவர் என்றால், ‘வாத்தி’ புகழ் சம்யுக்தா மேனன். க்ளைமாக்சில் கெட்ட ஆவி உடலுக்குள் புகுந்த பின், எரியும் நெருப்பு வளையத்திற்குள் உட்கார்ந்து கொண்டு ஆங்காரக் கூச்சலிடும் போது நம்மையே பகீரடைய வைக்கிறார். இவரது ஃப்ளாஷ் பேக் துஷ்டதனமாக இருப்பதாலோ என்னவோ, சாய் தரம் தேஜுக்கும் சம்யுக்தாவுக்கும் இடையே ரொமான்ஸ் சீன்களை குறைத்துவிட்டார் போல டைரக்டர் கார்த்திக் வர்மா தண்டு. மற்ற எல்லோருமே தெலுங்கு நடிகர்—நடிகைகள் என்பதால் நமக்கு யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

அல்லு அர்ஜுனுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த டைரக்டர் சுகுமாரின் திரைக்கதை மீடியம் ஸ்பீடில் போகிறது. படத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆர்ட் டைரக்டரும் மியூசிக் டைரக்டரும் தான். அந்த கிராமம் ஒரிஜினலா? செட்டா? என தெரியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர். அதே போல் படத்தின் திகில் ஜானருக்கு மேலும் திகில் கூட்டியிருக்கார் மியூசிக் டைரக்டர் அஜனீஷ் லோக்நாத்.

குடியின் கொடுமையைப் பத்திச் சொல்லும் படங்களில் க்ளைமாக்சில் ”குடிக்காதீகடா” என்பதைப் போல, இந்த ‘விரூபாக்‌ஷா’விலும் படம் முழுக்க மூடநம்பிக்கையை லாரி லாரியாகக் கொட்டிவிட்டு, க்ளைமாக்சில் ஹீரோ, “அடுத்த தலைமுறையையாவது படிக்க வைங்கடா” என டீ ஸ்பூன் அளவுக்கு புத்திமதி சொல்கிறார்.

இட் இஸ் ‘விரூபாக்‌ஷா’.

–மதுரைமாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.