அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எப்படியெல்லாம் மேட்ச் பண்றாய்ங்க …‌!

திருச்சியில் அடகு நகையை விற்க

அவசர அவசரமா Drawing class க்கு போய்ட்டு இருக்கோம்.

போறப்பவும் வரும்போதும் காய்கறி வாங்க, மாவு அரைக்க, மளிகை சாமான் வாங்க….இப்படி எனக்கு தேவையானதற்கான பொருட்களை எல்லாம் எடுத்துக்கிட்டேன்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

வண்டிய எடுத்து 20 நிமிசம் ஆச்சு… சட்டுன்னு கனலி: அம்மா… Drawing note book  எடுத்துக்கல (கனிராவும் தான்) கோவம் தலைக்கேறுது…

சில பல கடுமையான வார்த்தைகளால அர்ச்சனை…

https://www.livyashree.com/

சிறு அமைதி

கனிரா:  ம்மா..

என்ன?

ஒரே வெயிலா இருக்கு வரும்போது ஐஸ்கிரீம் வாங்கி தரியா

மீண்டும் அர்ச்சனை

Drawing book மறந்துட்டு வந்துட்டு உனக்கு ஐஸ்கிரீம் கேக்குதா… கொன்னேபுடுவேன் ஒழுங்கா வாய மூடிட்டு வா

“நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு”

இது என்னன்னு தெரியுமா மா…

என்னது திருக்குறள் மாதிரி தெரியுது

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆமா நேத்து மிஸ் சொல்லி குடுத்தாங்க, அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

சொல்லு

ஒருத்தவங்களோட குணம் தெரிஞ்சு நடந்துக்குறவங்க அவங்க தப்பு செஞ்சிலும் கெட்டதா நெனைக்க மாட்டாங்களாம். அதுக்கு பதிலா நல்லது தான் செய்வாங்கலாம்.

ஓஹோ..( my mind – பரவாயில்லை திருக்குறளை நல்லா தெளிவா சொல்றாளே)

இதுல இருந்து என்ன தெரியுது

அதான் சொல்லிட்டியே

அப்ப ஐஸ்கிரீம் வாங்கி தருவ தான

ஏன் வாங்கி தரணும்

என் குணம் தான் உனக்கு தெரியும்ல

நான் தப்பு பண்ணினாலும் நீ நல்ல பண்பை தான வெளிப்படுத்தணும். அப்ப நான் கேட்டத வாங்கி தரணும் தான

எப்பிடி யெல்லாம் மேட்ச் பண்றாய்ங்க..😩

ஆனா திருக்குறளை வாழ்க்கையோட பொருத்திப் பார்க்க வைத்த கனிரா மிஸ்ஸுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் ☺️💐

 

 —    அ.யோகானந்தி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.