அங்குசம் பார்வையில் ‘ கூழாங்கல் ‘ படம் எப்படி இருக்கு… !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘ கூழாங்கல் ‘

தயாரிப்பு: ரெளடி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட். நயன்தாரா & விக்னேஷ் சிவன். டைரக்டர்: பி.எஸ்.வினோத்ராஜ். ஒளிப்பதிவாளர்கள்: விக்னேஷ் குமுளை & ஜெயபாரதி, பின்னணி இசை: யுவன் சங்கர் ராஜா. ஆர்ட் டைரக்டர்கள்: ஞான்ஊட் & சிஞ்சு, எடிட்டிங்: கணேஷ் சிவா, சவுண்ட் டிசைன்: ஹரி பிரசாத். பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா & ரேகா டி ஒன். மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரமிக்க வைத்த இருவர்: கருத்தடை யான்& சிறுவன் செல்லப்பாண்டி.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

கூழாங்கல்
கூழாங்கல்

குடிகார கணவன் மீது கடுப்பாகி அம்மா வீட்டுக்கு சென்றுவிடுகிறார் மனைவி. வயிறு காய்ந்ததும், மனைவியை அழைத்துவர, பள்ளியில் படிக்கும் தனது மகனையும் அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டுக்கு கிளம்புகிறார் கணவன். போகும் போதே குவாட்டர் வாங்கி ‘கட்டிங்’ போட்டுவிட்டு மீதியை இடுப்பில் சொருகிக் கொள்கிறார். மாமியார் வீட்டில் சண்டையாகி, சட்டை கிழிந்து மீண்டும் தனது ஊருக்குப் போகிறார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

ஒன்றரை வரி தான் கதை. அதில் ஓராயிரம் சேதிகளைச் சொல்லி மிகச் சிறந்த சினிமாவைப் படைத்து, சினிமா ரசனையில் ரசவாத மாற்றத்தை ஏற்படுத்தி, அசத்திவிட்டார் டைரக்டர் வினோத் ராஜ். படம் மொத்தமே 76 நிமிடங்கள் தான். அதில் வறுமையுடனும் வறட்சியுடனும் வாழப்பழகிவிட்ட பொட்டல் காட்டு மாந்தர்கள் தான் எத்தனை எத்தனை ரகங்கள். அத்தனையும் நிஜங்கள். கேமராமேன்கள் வினோத்குமுளை, ஜெயபாரதி ஆகியோரின் உண்மையான கடும் உழைப்பு க்கு தங்கக் கிரீடம் தகுதியானது தான்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கூழாங்கல்
கூழாங்கல்

அதேபோல் போல, போலி பிம்பங்கள், ஆர்ப்பாட்டக் கூச்சல்களால் வலிந்து கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் என் கடன் பணி செய்து பாராட்டு வாங்குவது மட்டுமே என்று பயணிப்பவர் இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா. 76 நிமிடங்கள் ஓடும் இந்த ‘கூழாங்கல்’லில் மூன்றே இடங்களில் மொத்தம் மூன்று நிமிடங்கள் மட்டும் மெல்லிய பின்னணி இசை கோர்த்து இசைஞானியின் வாரிசு என்பதை நிரூபித்திருக்கிறார். ஆர்ட் டைரக்டர்கள் ஞான்ஊட், சிஞ்சு, சவுண்ட் டிசைனர் ஹரி பிரசாத் என எல்லோருமே கூழாங்கல்லின் ஒளி மிளிர சாட்சியாக இருக்கிறார்கள்.

கூழாங்கல்
கூழாங்கல்

நல்ல சினிமா, தரமான சினிமா, உண்மைக்கு மிக நெருக்கமான சினிமாவை விரும்புவோர்க்கு இந்த ‘கூழாங்கல்’ மதிப்பு மிக்க வைரக்கல் தான். அக்டோபர் 27 முதல் சோனி லிவ் ஓடிடியில் ரிலீஸாகிறது ‘கூழாங்கல்’லின் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜை மீண்டும் ஒருமுறை மனதாரப் பாராட்டுவோம்.

-மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.