தமிழக பல்கலைக்கழகத்தின் சுதந்திரம் பறி போவதை நாம் அனுமதிக்க இயலாது.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழக பல்கலைக்கழகத்தின் சுதந்திரம் பறி போவதை நாம் அனுமதிக்க இயலாது.

விடுதலைப் போராட்டத் தியாகியை அவமதிக்கும் ஆளுநரைக் கண்டித்து நவம்பர் 2, 2023 நடக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும்!

இனிய ரமலான் வாழ்த்துகள்

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஏகமனதாக தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதற்கான தனது கையொப்பத்தை இட மறுக்கும் ஆளுநர் அவர்கள் பல்கலைக் கழகத்தின் சுதந்திர செயல்பாடுகளில் தலையிடுகிறார்.

மக்களாட்சி மாண்புகளை மதிக்காத ஆளுநரின் செயலை ஏற்க இயலாது என்ற நிலையில் உயர் கல்வி அமைச்சர் அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற இருக்கும் மாணவர்கள் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து, தாங்கள் in absentia ‌வாக தபால் மூலம் பட்டம் பெற்றுக் கொள்கிறோம் என்று அறிவிக்க வேண்டும்.

தோழர் சங்கரய்யா
தோழர் சங்கரய்யா

அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்திய எழுச்சி மிக்க போராட்டமே இந்திய விடுதலைக்கு மிகப் பெரும் பங்காற்றியது. அத்தகைய மாணவர்கள் போராட்டத்தில், தோழர் என். சங்கரய்யா அவர்கள் மாணவ பருவத்தில் பங்கேற்று, சிறைச் சென்று நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டதின் விளைவாக தனது கல்லூரிப் பட்டப் படிப்பை முடிக்க இயலாமலேயே போனது.

அத்தகைய தியாகங்களை தனது மாணவ பருவத்திலேயே செய்துள்ள தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு தரப்படும் டாக்டர் பட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் கௌரவிக்கும் செயலாகும்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

102 வயதில் இன்னும் உயிரோடு வாழ்ந்து வரும் தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் இந்த டாக்டர் பட்டம் எந்த சிறப்பையும் அளித்த விடப் போவதில்லை.‌

ஆளுநரின் நடவடிக்கை உயிருடன் வாழும் விடுதலைப் போராட்டத் தியாகியை அவமானப்படுத்தும் செயல். பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவது மாணவர்கள் வாழ்வில் மறக்க இயலாது.

அந்நாளுக்காக ஏங்காத மாணவர்களே இல்லை.இருந்த போதிலும், விடுதலைப் போராட்டத் தியாகியை ஆளுநர் அவமதிப்பது எந்த வகையிலும் ஏற்க இயலாதது.

விடுதலைப் போராட்டத் தியாகிகளை நன்றியுடன் போற்றிப் பாராட்டும் பண்பு கொண்ட மாணவர்கள், விடுதலைப் போராட்டத் தியாகிக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்தை கண்டிக்கும் வகையில், நாளை நடக்கும் மதுரை காமராசர்
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும்.

விடுதலைப் போராட்டத் தியாகியை அவமதிப்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் பல்கலைக்கழகத்தின் சுதந்திர செயல்பாட்டை அனுமதிக்காமல், அதன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஆளுநர் தலையிடுகிறார் .வேந்தர் என்ற தனது பதிவு வழி பொறுப்பின் கண்ணியத்திற்கு உரிய வகையில் ஆளுநர் நடந்து கொள்ளவில்லை.

கல்வி நிறுவனங்களின் ஜனநாயகச் செயல்பாடுகளுக்கு இத்தகையப் போக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழகத்தின் சுதந்திரம் பறிபோவதை நாம் அனுமதிக்க இயலாது.

பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
நவம்பர் 1, 2023.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.