விருதுநகர் – மனைவியை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் கைது !
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட தாயில்பட்டி கலைஞர் காலணியை சேர்ந்த பட்டாசு கூலி தொழிலாளி பொன்னுச்சாமி ( 39 ) இவருக்கு முனீஸ்வரி (32) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி கடந்த 10 ஆண்டு ஆகிறது, இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளது, இருவரும் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார்கள்,

சம்பவத்தின் போது பொன்னுச்சாமி வீட்டு அருகே எரிந்த நிலையில் உடல் கிடந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொன்னுச்சாமியை முதலில் விசாரணை செய்ததில் மனைவி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் பொன்னுச்சாமியை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அதிகாலை 4 மணி அளவில் நான் மது போதையில் முனீஸ்வரியிடம் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்தது குறித்து கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, கோபம் தலைக்கேறிய நிலையில் அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்ததாகவும், பின்னர் எனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பிடித்து உடலை எரித்ததாக தெரிவித்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் உயிரிழந்த முனீஸ்வரியின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுச்சாமியை கைது செய்தனர்.
— மாரீஸ்வரன்.