போலி பட்டா வழங்கிய அதிகாரி! நடவடிக்கை எடுக்க விவசாயி கோரிக்கை!
தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி கிராமத்தில், போலி பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியரிடம் விவசாயி முருகன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி கிராமத்தில் உள்ள பட்டா எண் 444, சர்வே எண் 15/1, சுமார் 5.1/2 ஏக்கர் நிலத்திற்கு எந்த விதமான மூல ஆவணமும் இல்லாமல் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்டா, சர்வே எண்ணில் ஆர்டிஆர் பைலில் இல்லை என்றும் ஆர்டிஐ மூலம் தகவல் உள்ளது.
பட்டா எண் 303 சர்வே எண் 15 ஏ என்ற ஒரு ஆவணத்தில் உள்ளதை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
போலி பட்டா உற்பத்தி செய்வதற்கு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
— ஜெய்ஸ்ரீராம்.