கோடிக்கணக்கில் மோசடி செய்த கூட்டுறவு வங்கி – அதிா்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
சுக்காங்கல் பட்டி, கோபால நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நான்கு ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மோசடி. வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சுக்காங்கல்பட்டி, கோபால் நாயக்கன்பட்டி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வாடிக்கையாளர்களின் நகை கடன். சேமிப்பு கணக்கு, வேளாண்மை கடன், உள்ளிட்டவைகளில் பல கோடி ரூபாய் மோசடி 4 ஆண்டுகளாக நகை, பணம், உள்ளிட்டவர்களை மீட்க முடியாமல் வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சுக்காங்கல்பட்டி கோபாலநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர்கள் வைத்த நகைகளை தனியார் வங்கியில் வைத்து மோசடி.
இதே போல் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வங்கி கணக்குகளில் உள்ள பணம் முழுவதையும் எடுத்து மோசடி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வங்கியில் பிக்சட் டெபாசிட் பணத்தையும் முழுவதையும் கையாடல் செய்து மோசடி.
வாடிக்கையாளர்களின் பெயர்களில் வேளாண்மை கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர்.
குறிப்பாக வங்கியின் தலைவர் செல்வேந்திரன் செயலாளர் முருகராஜ் மற்றும் முருகவேல் ஆகிய மூன்று பேரும் பல கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து பலமுறை வாடிக்கையாளர்கள் வங்கியை தொடர்பு கொண்டு கேட்டால் உரிய பதிலளிக்காமல் பொதுமக்களை தொடர்ந்து அலைக்கழிப்பு செய்து வருகின்றனர்.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய நகைகள் மற்றும் பணம், டெபாசிட் பணம், கடன் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.