*கத்தார் அரசு விருதை வென்ற ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜூன்!*

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அல்லு அர்ஜுன், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார்.

சில நாட்களுக்கு முன்பு ‘கத்தார் தெலுங்கானா’ திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்

அங்குசம் கல்வி சேனல் -

‘புஷ்பா 2’ இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இது, அல்லு அர்ஜூனின் தனிச்சிறப்பான திரைப்பயணத்தில்,  இன்னொரு மைல்கல்லாக அமைந்தது. ‘கங்கோத்திரி’யில் தொடங்கி ‘புஷ்பா’ வரை அல்லுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு பாராட்டத்தக்கது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஐந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் ஸ்பெஷல் ஜுரி விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள அவர், தெலுங்கு சினிமாவின் ‘ஐகான்’ ஸ்டாராக விளங்குகிறார்.

அல்லு அர்ஜூன் தனது அடுத்த படமான, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘AA22xA6′( தற்போதைக்கு ) மூலம் மீண்டும் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கிறார். இந்த படத்தை டைரக்டர் அட்லீ இயக்க உள்ளார். தற்போது முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.