இளையராஜா – வை இயக்க இவர்தான் கிடைத்தாரா ? பட்டிமன்றமான பயோபிக் !
எதையோ ஒன்றை எடுத்து வைத்துவிட்டால்… பிறகு இன்னொருமுறை ராஜாவின் கதையை படமாக்கும் வாய்ப்பும் இல்லாமல் போய்விடும்.
இளையராஜா – வை இயக்க இவர்தான் கிடைத்தாரா ? பட்டிமன்றமான பயோபிக் !
இளையராஜா பயோபிக்-ஐ அருண் மாதேஸ்வரன் இயக்குவதெல்லாம், தமிழ் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை; ராஜாவை சிறுமைப்படுத்தும் செயல்.
தனுஷ் பிரமாதமாக நடித்துவிடுவார்; அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அருண் மாதேஸ்வரன் இயக்கிய முந்தைய படங்களில் இருந்து, இவர் ராஜாவின் வாழ்க்கைக் கதையை படமாக்கும் நுண்ணுணர்வு கொண்டவர் என்ற அனுமானத்துக்கு வர முடியவில்லை.
ராஜாவின் திரையுலக பங்களிப்பு என்ன, மூன்று தலைமுறை தமிழர்களிடம் அவர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன, தமிழ் பண்பாட்டு அரசியலில் அவர் உருவாக்கியிருக்கும் மாற்றங்கள் என்ன… இதையெல்லாம் வரலாற்றோடு சேர்த்து புரிந்துகொள்ளும் சென்ஸிபிலிட்டி உள்ள ஒருவர்தான் அவரின் வாழ்க்கை கதையை படமாக்க முடியும். மேலும், ராஜாவின் இசை, தமிழ் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் காட்சி படிமங்களுக்கு… திரையில் நியாயம் செய்யும் காட்சிமொழி இவரிடம் இருக்கிறது என்ற நம்பகத்தன்மையும், இவரது முந்தைய படங்களில் இருந்து கிடைக்கவில்லை.
எதையோ ஒன்றை எடுத்து வைத்துவிட்டால்… பிறகு இன்னொருமுறை ராஜாவின் கதையை படமாக்கும் வாய்ப்பும் இல்லாமல் போய்விடும். ‘அதான் ஏற்கெனவே எடுத்தாச்சே..’ என்று தட்டிக்கழித்துவிடுவார்கள்.
நாங்கள் நண்பர்கள் சிலர், மிகச் சமீபத்தில், ‘ராஜாவின் வாழ்க்கை கதையை அவர் உயிரோடு இருக்கும்போதே யாரேனும் படமாக்க வேண்டும். ஆனால் அதற்கு திரைப்படம் போதாது. வெப்சீரிஸ்தான் சரியாக இருக்கும். அந்த வெப்சீரிஸையும் ஒரே ஒரு இயக்குனர் இயக்கக் கூடாது. ஒவ்வொரு எபிசோட்-க்கும் ஒரு இயக்குனர் வேண்டும். முதல் எபிசோட்-ஐ பாரதிராஜா இயக்க வேண்டும்’ என்று பேசிக்கொண்டோம். பாரதிராஜாவுக்கு வயதாகிவிட்டது; வாய்ப்பு இல்லை. சரி, வாய்ப்பு இருப்பதில் எந்த இயக்குனர்கள் எல்லாம் சரியாக இருப்பார்கள் என்று நாங்களே சில பெயர்களை பேசிக்கொண்டோம்.
01. கமல்ஹாஸன், 02. மிஸ்கின், 03. வெற்றிமாறன், 04. பா.ரஞ்சித், 05.பாலா. 06. மணிரத்னம், 07. கௌதம் வாசுதேவ், 8. அமீர், 09. தியாகராஜா குமாராஜா, 10. மாரி செல்வராஜ், 11. பிரேம் குமார்
இன்னும் தகுதிவாய்ந்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் எதற்கு இவரை தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. ராஜாவும் எதுக்கு ஒத்துக்கிறார்னு புரியல.ஏதாவது கேஸ், கீஸ் போட்டு இதை தடுக்க எதுவும் வழி இருக்கா?
முகநூலில் பாரதி தம்பி