வருமானம் குறைவு …. குவித்த சொத்துக்கள் கிடுகிடு … அசரவைக்கும் அண்ணாமலை அபிடவிட் !

தனது செலவுக்காக நண்பர்கள் உதவுதாக கூறும் அண்ணாமலையின் சொத்துக்கள் கோடிகளை தாண்டுவதுதான் சபாஸ் அரசியல்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வருமானம் குறைவு …. குவித்த சொத்துக்கள் கிடுகிடு … அசரவைக்கும் அண்ணாமலை அபிடவிட் !

திமுக அமைச்சர்களின், “திமுக பைல்ஸ்” எனும் பெயரில் வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில தலைவராக பொறுப்பெற்ற பிறகு அவரது வருமானம் பல மடங்கு அதிகரித்திருப்பதாக தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்த அபிடவிட்டுகள் மூலம் அம்பலமாகிறது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதும், அந்த இடத்தை அண்ணாமலை லாவகமாக கைப்பற்றினார். அவர் கடந்த 8.7.2021-ஆம் தேதி தமிழக பாஜகவின் தலைவரானார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சூ.தொட்டம்பட்டி நெடுங்காடுதான் அண்ணாமலையின் சொந்த ஊர். ஆனால் அவர் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்காகவே கடந்த சில மாதங்களுக்கு முன்பே கோயம்புத்தூரில் சீட் தனக்கே என்ற ஆருடத்தோடு அண்ணாமலை தனது முகவரியை கோயம்புத்தூர் தெற்கு சிவில் ஏரோ ட்ராம், பத்மநாப நகர் கதவு எண் 16 ல் குடியேறியுள்ளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy


அவர் கடந்த 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அப்போது அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலும் தற்போது கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அவர் தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்திலும் அவர் குறிப்பிட்டுள்ள சொத்து பட்டியல் கிடு கிடு ரகம்.
தற்போது அவர் “WE THE LEADERS FOUNDATION” டிரஸ்டில் மேனேஜிங் டிரஸ்டியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, தனது மனைவி அகிலா இயக்குநராக உள்ள CORE TALENT AND LEADERSHIP DEVELOPMENT PRIVATE LIMITED – BANGALORE என்ற நிறுவனத்தின் இயக்குனராக அண்ணாமலையும் இருப்பதாக கூறியுள்ளார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

2021 மற்றும் 2024 ஆண்டுகளில் அவரது வருமானம் அதிகரித்துள்ள விபரங்களை ஒப்பிட்டு பார்த்ததில் கடந்த 2021 விட தற்போது அண்ணாமலை 12,84,720/- ரூபாய் அதிகரித்தும், அவரின் மனைவி அகிலாவிற்கு ரூ.900,590/- ரூபாய் குறைந்தும் இருப்பதாக வருமானவரி தாக்கல் செய்துள்ள நிலையில், அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோரின் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு அதிகமாகி உள்ளது தெரியவருகிறது.
அண்ணாமலை தாக்கல் செய்த சத்தியபிரமாண வாக்குமூலங்களின் ஒப்பீட்டு பட்டியல் . (காண்க: அட்டவணை) கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரஃபேல் வாட்ச் சர்ச்சையின் போது பேசிய அண்ணாமலை அரசியல் வாதியாக தனக்கு மாதம் 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என்றும், இந்த செலவை தனி ஆளாக சமாளிக்க முடியவில்லை என்றும், தனக்காக நண்பர் வழங்கிய காருக்கு டீசல் கட்சி கொடுக்கிறது என்றும், அவரது வீட்டு வாடகையைக்கூட வேறு ஒருவர்தான் கொடுக்கிறார் என்றார்.
தனது செலவுக்காக நண்பர்கள் உதவுதாக கூறும் அண்ணாமலையின் சொத்துக்கள் கோடிகளை தாண்டுவதுதான் சபாஸ் அரசியல்.

ராகிணி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.