சமூகத்தை திரும்பிப் பார்க்க வைத்த திருநங்கைகள் !

கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி  அப்போதைய முதல்வர் கருணாநிதி  அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. திருநங்கைகளைச் சிறப்பிக்கும் வகையில் இந்நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கைகள் நாளாக அறிவிக்க ...

0

ஏப்ரல் 15 சர்வதேச திருநங்கைகள் தினம் !

பிறப்பால் ஆண் என அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தன்னுள் இருக்கும் பெண்மையை உணர்ந்து, மீதி வாழ்க்கையை பெண்ணாகவே வாழ முற்படுபவர்கள் தான் திருநங்கைகள். ஆனால், அதற்கு இந்த சமூகம் அவர்களை அனுமதிக்கிறதா என்பது கேள்விக்குறி தான்.

தங்கள் வாழ்க்கையை மானத்தோடு, மற்றவர்களைப் போல் மகிழ்ச்சியாக வாழ இவர்கள் பெரும் பிரயத்தனம் பட வேண்டி இருக்கிறது. ஆனால், முயற்சிகள் மேற்கொண்டாலும், அனைவருக்கும் அது சாத்தியப்பட்டு விடுவதில்லை. பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கை வலி நிரம்பியதாகத்தான் உள்ளது.

பிரீத்திகா யாஷினி

- Advertisement -

எனவே தான், திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி  அப்போதைய முதல்வர் கருணாநிதி  அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. திருநங்கைகளைச் சிறப்பிக்கும் வகையில் இந்நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கைகள் நாளாக அறிவிக்க வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட  கலைஞர் கருணாநிதி அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கையர் நாள் எனக் கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் தேதி  கருணாநிதி அரசு அரசாணை ஒன்றையும் பிறப்பித்தது.

அதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கையர் நாள் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருநங்கைகள் உரிமை சட்டம் 2014’ என்ற பெயரிலான இந்த சட்டம் கடந்த 45 ஆண்டுகளுக்குப் பிறகு தனி நபர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்று முதன்முறையாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்தவர் திமுக எம்பி திருச்சி சிவா.

‘தாய்மடி’ தேவி.

சாதனை திருநங்கைகள் !

பெரும்பாலும் திருநங்கைகள் சமூகத்தினர் பாலியல் துன்புறுத்தல், சிறுமைப்படுத்துதல் மற்றும் வெறுப்புணர்வுக் குற்றங்களால் பாதிக்கப்படுவது இன்றும் சமூகத்தில் தொடர்கதையாக உள்ளது. ஆனால், உலகமே எதிர்த்து நின்றாலும், வாழ்ந்து காட்டுவதே பெரும் சாதனை என வைராக்கியமாக சாதித்துக் காட்டி வருகின்றனர் திருநங்கைகள் பலர். நம்மையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்த, தமிழகத்தைச் சேர்ந்த சாதனை திருநங்கைகள் சிலர் பற்றிய தொகுப்பு இதோ!

♦ கடந்த 2020 ஆண்டு நடந்த நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இவரே, இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை ஆவார்.

4 bismi svs
கல்கி சுப்ரமணியம்.

♦ ஆணாக பிறந்து, 16 வயதில் தான் யார் என்ற குழப்பத்திலிருந்து இன்று வரை, கல்கி பல சோதனைகளையும், சவால்களையும் கடந்து வந்திருக்கிறார்  ஒரு கலைஞராக, தொழில்முனைவராக, நல்ல கவிதாயினியாக, கோவையில் வசிக்கும் கல்கி, ‘கல்கி ஆர்கானிக்’ என்ற ரசாயனங்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சுத்தமான சோப்பு, மற்றும் சுகாதார பொருட்களை விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். ஓவியக் கலைஞராக பல கண்காட்சிகளையும் நடத்தும் கல்கி பல சர்வதேச திருநங்கை மாநாடுகளில் விருந்தினராகவும் சென்று வருகிறார்  கல்கி சுப்ரமணியம்.

திருநங்கை பத்மினி பிரகாஷ்

♦ இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் என்ற தனது அடையாளத்தின் மூலம், ஒடுங்கிப் போகச் செய்தவர் திருநங்கை பத்மினி பிரகாஷ்.

♦ சேலத்தைச் சேர்ந்த தேவிக்கு சமூகப் பணியில் அதிக ஆர்வம். 2004-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தன்னார்வலராகப் பணியாற்றியவர், 2009-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ‘தாய்மடி’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி ஆதரவற்ற முதியோர்க்கு உணவு, உறைவிடமும் தந்து உதவி வருகிறார்.

♦ இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் உதவி ஆய்வாளராக பதவியேற்று மொத்த நாட்டையும் சல்யூட் அடிக்க வைத்தவர் தருமபுரியைச் சேர்ந்த பிரீத்திகா யாஷினி. சிறு வயது முதற்கொண்டே காக்கிச்சட்டைக் கனவில் இருந்த ப்ரீத்திகா, அதனை அணிய சந்தித்த தடைகள் ஏராளம். ஆனால், தடைகளையெல்லாம் தவிடு பொடியாக்கி, தன் சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இன்று வெற்றியாளராக இருக்கிறார்.

பி.ஐஸ்வர்யா

♦ கடந்த ஆண்டு நிகழ்வின் போது மாநில அளவிலான ‘சிறந்த திருநங்கையருக்கான’ விருதை வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையான பி.ஐஸ்வர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சேலத்தை சேர்ந்த திருநங்கை ராஜேஸ்வரி கூறுகையில் போராட்டத்தால் இறந்த பல திருநங்கைகளுக்கு இந்த நாளை சமர்ப்பணம் செய்கிறேன்.”

திருநங்கை ராஜேஸ்வரி.

இளம் திருநங்கைகள் பலர் சாதிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு. முதியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல், ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக செயல்படணும். உரிமைகளை மீட்டு எடுக்கணும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை தடை செய்யப்பட்ட குழுக்கள் மாதிரிதான் திருநங்கைகள் இங்க வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். இப்ப இந்த நிலைமை கொஞ்சமாக மாறியிருக்கு. கடந்த 15 வருடத் தொடர் போராட்டத்தால் தான் இவ்வளவு மாற்றம் நடந்திருக்கு. வாக்களிக்கும் உரிமை, குடும்ப அட்டைனு உரிமைகளுக்கான எல்லாம் கிடைச்சுட்டு இருக்கு. இப்போது திருநங்கைகளை புறக்கணிப்பது, வெறுத்து ஒதுக்குவது எல்லாம் குறைந்து இருந்தாலும் இன்று வரை சம உரிமை, அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்றால் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் , எங்களுக்கான சம உரிமை, சம மரியாதை கொடுக்க வேண்டும் என்று அரசியல் அமைப்புகளிடமும், பொதுமக்களிடமும் உங்கள் அங்குசம் செய்தி வாயிலாக கோரிக்கை வைக்கிறேன்.” என்கிறார் அவர்.

மணிகண்டன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.