என்னை கவனித்தால் உன்னை கவனிக்க மாட்டேன் – தேர்தல் அதிகாரியின் டீலிங் !

தூரத்திலிருந்து செய்தியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அரங்கேறிய இந்த கூத்துக்களை கண்டு தலை கிறுகிறுத்துதான் கிடக்கிறார்களாம் லோக்கல் வட்டாரத்தில்.

0

என்னை கவனித்தால் உன்னை கவனிக்க மாட்டேன் – தேர்தல் அதிகாரியின் டீலிங் !

லைக்கோட்டை தொகுதிக்கு பக்கத்து நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கை முறிவு வைத்தியத்துக்கு பெயர்போன சட்டமன்ற தொகுதியில் மலைப்பாங்கான கிராமங்களுக்கு ஓட்டு கேட்டு சென்றிருக்கிறார், வாரி வழங்கும் வள்ளலான அந்த வேட்பாளர்.

வேட்பாளரின் பிரச்சாரங்களையும் மக்களுக்கு பரிசு பொருட்கள் கொடுக்கிறார்களா? என்பதையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள லீலைகளுக்கு பெயர்போன கடவுளின் பெயரை முதலாவதாக கொண்ட அந்த அதிகாரி, ”என்னை கவனித்தால் உங்களை கவனிக்க மாட்டேன்” என்பதாக, சம்பந்தபட்ட வேட்பாளரின் மாநில நிர்வாகியிடம் தலையை சொரிந்திருக்கிறார். அவரும் அடுத்த பாயிண்டில் பேசிக்கலாம் என சைகை காட்டி கிளம்பியிருக்கிறார்.

4 bismi svs

சொன்னபடி, டாப்பான மலைப் பகுதி கிராமம் ஒன்றில், வேட்பாளருக்கும் முன்பாகவே முதல் ஆளாக போய்ச்சேர்ந்துவிட்டாராம் அந்த பொறுப்பான அதிகாரி. வாக்கு கொடுத்தபடி, சுவீட் பாக்சை கொடுக்க இன்முகத்தோடு இனிப்பை வாங்கிக்கொண்டு விருட்டென்று கிளம்பிவிட்டாராம் உள்ளாட்சி நிர்வாகத்தில் செயல்துடிப்பான பதவியிலுள்ள அந்த அதிகாரி. இதே பாணியில் கட்சி பாகுபாடின்றி எல்லா வேட்பாளர்களிடமும்  தன் கைவரிசையை இவர்  காட்டியுள்ளார் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

- Advertisement -

தூரத்திலிருந்து செய்தியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அரங்கேறிய இந்த கூத்துக்களை கண்டு தலை கிறுகிறுத்துதான் கிடக்கிறார்களாம் லோக்கல் வட்டாரத்தில்.

அங்குசம் புலனாய்வு குழு.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.